தளபதிக்கு ஒரு ‘விசில் போடு’! சாதனை படைக்கும் விஜய் பட பாடல்!!

WhistlePodu Lyric Video

WhistlePodu  : கோட் படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடல் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.

விஜய் நடிக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்னதாக படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி வெளியான 1 நாளில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில், அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடலும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த விசில் போடு பாடலை மதன் கார்க்கி எழுத யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடலை பாடி உள்ளார். பாடலில் வரும் வரிகள் அரசியல் சார்ந்து இருக்கிறது. அதைப்போல யுவன் சங்கர் ராஜாவின் இசை ஆடாதவர்களையும் ஆட்டம் போடும் வகையில் இருக்கிறது. ஒரு பக்கம் பாடல் சுமார் என விமர்சனங்கள் வந்தாலும் கூட மற்றோரு பக்கம் யூடியூபில் பட்டையை கிளப்பி வருகிறது.

இதுவரை பாடல் வெளியாகி 19 மணி நேரங்கள் ஆகி இருக்கும் நிலையில், யூடியூபில்  20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருக்கிறது. அதைப்போல 1 மில்லியனிற்கு மேல் லைக்குகளையும் வாங்கி இருக்கிறது. இதற்கு முன்னதாக விஜயின் பாடல்கள் நா ரெடி தான் பாடல் மற்றும் ரஞ்சிதமே பாடல்கள் 16 மில்லியன் பார்வையாளர்களை தான் பெற்று இருந்தது.

ஆனால், தற்போது 19 மணி நேரத்திலே கோட் படத்தின் விசில் போடு பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அந்த பாடல்களின் சாதனையை முறியடித்துள்ளது. இதுவரை தமிழில் வெளியான பாடல்களிலே ஒரு நாளில் அதாவது 24 மணி நேரத்தில் அதிகம் பார்வையாளர்களை பெற்ற பாடல்களின் பட்டியலில் அரபிகுத்து பாடல் தான் இருக்கிறது. அந்த சாதனையை விசில் போடு பாடல் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்