ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி ….!இனி எச்ஐவி நோய்கள் அதிகமாக பரவும்…!பாஜக மூத்த தலைவர் சாபம்
ஓரினச்சேர்க்கை குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் தன்பாலின் ஈர்ப்புக்கென்று பல நாடுகளில் சட்டம் உள்ளது. மேலும் பல நாடுகள் அதனை தற்போது அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் 1950 களில் இந்தியாவில் போடப்பட்ட ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டம் 377-வது பிரிவு செல்லாது என இந்திய சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
பகுதி 377 இப்படி ஒரினச் சேர்க்கை கொள்வோர் மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர்கள் அனைவரும் தண்டிக்கப்பட கூடியவர்கள் என்று அந்த சட்டம் முன்னதாக இருந்தது. தற்போது சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பின்படி அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டு ஓரினச்சேர்க்கை கிட்டத்தட்ட அதிகாரபூர்வமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,
ஓரினச்சேர்க்கை உறவு குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது.உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இறுதியானது அல்ல, 7-பேர் கொண்ட அரசியல்சாசன அமர்விடம் இந்த வழக்கை எடுத்துச் செல்வேன்.
ஓரினச்சேர்க்கை உறவு குற்றமில்லை என்ற தீர்ப்பினால், சமூகத்தில் இனிமேல் குற்றங்கள் அதிகரிக்கும். பாலுறவு மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும், குறிப்பாக எச்ஐவி நோய்கள் அதிகமாக பரவும் என்று தெரிவித்துள்ளார்.
.