பேசுன சம்பளத்தை விட அதிகமா கேட்டாரா எம்.ஜி.ஆர்? உண்மையை உடைத்த தயாரிப்பாளர் !

M.G.R : எம்.ஜி.ஆர் அவர்கள் தான் பணியாற்றிய ஒரு படத்திற்கு அதிக சம்பளம் கேட்டதாக வந்த ஒரு தகவலை தெளிவு படுத்தி கூறி இருக்கிறார். அந்த படத்தின் தயாரிப்பாளர்.

சினிமா துறையில் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் எப்படிப்பட்ட நடிகர் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஒரு படத்திற்கு இரண்டு முதல் 3 லட்சம் வரை சம்பளம் வாங்கும் எம்.ஜி.ஆர், அன்பே வா படத்தின் போது வாங்கிய சம்பளத்தை விட கூட கேட்டதாக ஒரு சில பத்திரிகைகளில் அன்றைய நாட்களில் எழுதினார்கள்.

அதனை குறித்து பல சர்ச்சைகள் இருந்து வந்த நிலையில் தற்போது அன்பே வா படத்தின் தயாரிப்பாளரான எம்.சரவணன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அதனை விளக்கி கூறியிருக்கிறார். அவர் பேசுகையில்,”அன்பே வா படத்தின் போது எம்.ஜி.ஆர் உடன் அந்த படத்திற்கு 3 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசி இருந்தோம். மேலும், நான் அந்த படத்தை வருகிற 1966 ம் ஆண்டின் பொங்கல் அன்று வெளியிட வேண்டும் என்று கேட்டு கொண்டிருந்தேன்.

அப்போது எம் .ஜி.ஆர் என்னோடு அதே நாளில் வீரப்பா தயாரிக்கும் ‘நான் ஆணையிட்டால்’ படமும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். நான் அதற்கு ஒப்புக்கொண்டு விட்டேன்  சரி கவலைய உடுங்க நான் வீராப்பாவிடம் பேசி கொள்கிறேன் என்று போனார். அதன் பின் வீரப்பா (RMV) என்னிடம் வந்து பேசினார்.

வீரப்பா என்னிடம் வந்து, “உங்கள் படத்தை எம்.ஜி.ஆர் முன்னதாக அதாவது பொங்கல் அன்று வெளியிட சொல்லிவிட்டார். என் படத்தை தள்ளி வெளியிட கூறிவிட்டார். மேலும், ஒரு ரூ.25 ஆயிரம் கூடுதல் வேண்டும் என்று கேட்டார்” என்று கூறினார். அதை எம்.ஜி.ஆர் தான் கேட்டாரா என்று எனக்கு இப்பொது வரை தெரியாது. ஆனால், மொத்தமாக ரூ.3,25,000 அவருக்கு அன்பே வா படத்திற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுத்தோம்.

ஒரு பிரச்சனை இல்லாமல் படத்தை நன்றாக முடித்து கொடுத்ததுடன், படமும் சொன்ன தேதியான பொங்கலுக்கும் வெளியானது”, என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தயாரிப்பாளரான எம்.சரவணன் பேசி இருந்தார். 1966 ஜனவரி 14 – தேதி ரிலீஸ் ஆன ‘அன்பே வா’ திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்