இஸ்ரேலை தாக்க தயார் நிலையில் ஈரான்.. அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!
Joe Biden: இஸ்ரேலை தாக்குவதற்கு ஈரான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகள் மத்தியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அதேபோன்று இஸ்ரேல் – ஹமாஸ் படையினர் இடையே சமீப காலமாக தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது.
இதில் இஸ்ரேல் அண்டை நாடான ஈரான் தலையிடும் அவ்வப்போது காணப்படுகிறது. இந்த பதற்றமான சூழலில் கடந்த வாரம் சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாகவும், அதற்கு கெடு வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இஸ்ரேலை தாக்குவதற்கு ஈரான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது, இஸ்ரேலை தாக்க ஈரான் தயாராக இருக்கிறது.
தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், ட்ரான்களுடன் இஸ்ரேலை தாக்குவதற்கு ஈரான் படை தயாராக உள்ளது. இஸ்ரேலில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்க திட்டமிட்டு இருப்பதாகவும், இருப்பினும் இது உறுதியான தகவல் இல்லை என்பது போன்றும் பைடன் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இஸ்ரேலை தாக்க வேண்டாம் என ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலை பாதுகாப்பதற்கான தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும் என்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினாலும் அவர்கள் வெற்றி பெற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.