அந்த நடிகையை ரகசிய திருமணம் செய்த தர்ஷன்? வைரலாகும் புகைப்படங்கள்!

dharshan

Darshan : நடிகையுடன் திருமண கோலத்தில் தர்ஷன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

கனா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சில படங்களில் முக்கியமான சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இருந்தாலும் இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டதன் மூலம் தான் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார் என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி அவருடைய பெயரை வெளியே தெரிய வைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தர்ஷனுக்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது.

இந்த சூழலில் தர்ஷன் பிரபல நடிகையான அனு குரியன் உடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. புகைப்படத்தை வைத்து பார்க்கையில் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இருவருமே அதிகாரப்பூர்வமாக தங்களுக்கு திருமணம் என்று எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்கவில்லை. எனவே, இது உண்மையா என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை.

இருந்தாலும் திடீரென இவர்கள் இருவரும் திருமணம் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் கசிந்துள்ள காரணத்தால் உண்மையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டுவிட்டார்கள் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். உண்மையில் இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா அல்லது படங்களின் படப்பிடிப்பா? என்பதை விளக்கம் கொடுத்தால் தான் தெரியவரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்