கேம் விளையாடும் போது போன் ஹேங் ஆகுதா? கவலையை விடுங்க டிப்ஸ் இதோ!

Phone Hanging Problem Solve Tips

Phone Hanging Problem Solve Tips : போன் கேம் விளையாடும்போது ஹேங் ஆகும் பிரச்னையை தீர்க்க கீழே சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

நம்மில் பலரும் விரும்பி ஸ்மார்ட் போன் வாங்குது கேம்கள் விளையாடி நேரத்தை செலவு செய்யத்தான். பலரும் பிரிபயர், பப்ஜி, க்ளாஸ் ஆப் க்ளன்ஸ் உள்ளிட்ட கேம்களை விளையாடி கொண்டும் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் பெரிய தலைவலி என்றால் கேம் விளையாடி கொண்டு இருக்கும்போது போன் ஹேங் ஆவது தான்.

2 ஜிபி ரேம் கொண்ட போன்களை வைத்து இருப்பவர்கள் அதில் ரொம்பவே பாவம் என்று கூட சொல்லலாம். ஏனென்றால், அவர்களுக்கு எல்லாம் அடிக்கடி போன் ஹேங் ஆகும். இந்நிலையில், கேம் விளையாடும்போது நமது போன் ஹேங் ஆகாமல் இருக்கா சில டிப்ஸ்கள் நாங்கள் கொண்டு வந்து இருக்கிறோம். இந்த டிப்ஸ்களை நீங்கள் பாலோவ் செய்தால் உங்கள் போன் ஹேங் ஆகாமல் சற்று வேகமாக இருக்கும்.

முதலில் உங்களுடைய போனின் ஸ்டோரேஜை முடிந்த அளவிற்கு ஃப்ரீயாக வைத்து கொள்ளுங்கள் அதாவது 6 ஜிபி ரேம் போன் வைத்து இருப்பவர்களுக்கு கேம் விளையாடும்போது போன் ஹேங் ஆனது என்றால் 20 ஜிபி ஸ்டோரேஜ் வரை ஃப்ரீயாக வைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதுவே 2ஜிபி அல்லது 4 ஜிபி ரேம் கொண்ட போன்கள் வைத்து இருப்பவர்கள் முடிந்த அளவிற்கு புகைப்படங்கள் வீடியோக்கள் எதுவும் போன்களில் வைத்து கொள்ளாமல் கேம்ஸ் மட்டும் வைத்து கொள்ளுங்கள். இது ஒரு டிப்ஸ்.

மற்றோரு டிப்ஸ் என்னவென்றால், உங்களுடைய போனில் இருக்கும் டெவலப்பர் ஆப்ஷன் (Developer Options) அமைப்புக்கு செல்லவேண்டும். இந்த அமைப்பு போனில் இல்லாதவர்கள் உங்களுடைய போனில் இருக்கும் Build Number -ஐ சில முறை டச் செய்து கொண்டு இருந்தாலே வந்துவிடும். அதன்பிறகு டெவலப்பர் ஆப்ஷன்க்கு சென்று அதில் Running Services என்று தேடுங்கள். அந்த அமைப்புக்கு சென்ற பிறகு நீங்கள் உபயோகம் செய்து கொண்டு இருக்கும் செயலியில் எந்தெந்த செயலியில் எவ்வளவு ரேம் பயன்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பது தெரியும்.

அதில் சென்று நீங்கள் உபயோகம் செய்யாமல் இருக்கும் செயலிகளை க்ளிக் செய்து அதில் நிறுத்துக (stop) என்பதனை கொடுங்கள். இப்படி செய்வதன் மூலம் தேவை இல்லாமல் உங்களுடைய போனில் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் ரேம்கள் க்ளியர் ஆகி போன் சற்று வேகமாக இருக்கும்.

உங்கள் போன் 2ஜிபி, 4ஜிபி மற்றும் 6ஜிபி RAM கொண்ட போன் என்றால் இந்த 2 செட்டிங்ஸை செய்தலே போதும் உங்கள் போன் ஹாங் (Hang) ஆகாது. அது என்ன செட்டிங்ஸ் என்றால் முதலில் உங்கள் போனில் இருக்கும் ப்ளே ஸ்டார் (Play Store) ஆப்பை திறந்து அதில் செட்டிங்ஸ்க்குள் இருக்கும் ஆட்டோ அப்டேட் ஆப்ஸ்க்குள் (Auto Update Apps) சென்றால் அதில் டூநாட் ஆட்டோ அப்டேட் ஆப்ஸ்ஸை (Do Not Auto Update Apps) ஆன் செய்து வையுங்கள்.

இதனால் என்ன பயன் என்றால் உங்கள் போனில் பேக்ரவுண்ட்டில் (Background) இருக்கும் வேறு ஆப்ஸ்கள் அதுவாகவே அப்டேட் ஆகி கொள்ளாது. இதனால், கேம் விளையாடும் பொழுது ஹாங் ஆகாமல் இருப்பதை தடுப்பதுடன் தேவை இல்லாமல் செலவாகும் நெட்டையும் பாதுகாக்கலாம். 2-வது செட்டிங்ஸ் என்னவென்றால் நமது போனில் இருக்கும் செட்டிங்ஸ்க்குள் சென்று அபௌட்போன் என்ற ஆப்ஷன்க்குள் செல்ல வேண்டும்.

அதில் ஸ்க்ரோல் செய்து பில்ட் நம்பர் என்ற ஆப்ஷனை 7 முறை தொடர்ந்து தொட்டு கொண்டே இருங்கள். அப்போது உங்கள் போனின் டெவலப்பர் வெர்ஸன் (Developer Version) ஆன் ஆகி விடும். அதன் பின் மீண்டும் செட்டிங்ஸ்க்குள் சென்று அடிஷனல் செட்டிங்ஸ்க்குள்(Additional Settings) செல்ல வேண்டும்.

அதில் நிறைய ஆப்ஷன்கள் இருக்கும் அதில் கீழே நன்றாக ஸ்க்ரோல் செய்து பார்த்தால் விண்டோ அனிமேஷன் ஸ்கேல், ட்ரான்ஸ்ஷிஷன் அனிமேஷன் ஸ்கேல் மற்றும் அனிமேட்டர் அனிமேஷன் ஸ்கேல் என்ற 3 அப்டின்களுக்கு உள் இருக்கும் அனிமேஷன் ஆப்ஷனை ஆஃப் செய்து விடுங்கள். அதன் பின் கடைசியாக நாம் முதலில் ஆன் செய்த டெவலப்பர் வெர்ஸனை ஆப் செய்து விடுங்கள். இது போதும் இனிமேல் உங்கள் போன் ஹேங்கிங் பிரச்சனையிலிருந்து மீண்டு வந்துவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்