ரோஹித், இஷான் ஆல் தான் ஜெயிச்சோம் .! வெற்றியின் ரகசியத்தை உடைத்த பாண்டியா !

Hardik Pandiya [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆர்சிபியை அதிரடியாக வீழ்த்திய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வெற்றிக்கு பின் பேசி இருந்தார்.

ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 197 என்ற இலக்கை அடைய களமிறங்கிய மும்பை அணியின் ரோஹித் மற்றும் இஷானின் பவர்ப்ளெ அதிரடியில் மும்பை அணி 9-வது ஒவரிலேயே 100 ரன்களை கடந்தது.

அவர்களை தொடர்ந்து இம்பாக்ட் வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வெறும் 19 பந்துகளில் 52 ரன்களை எடுத்து மும்பை அணியின் வெற்றிக்கு ஒரு உறுதுணையான பாலம் அமைத்து சென்றார். இதன் மூலம் மும்பை அணி 15.3 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழந்து 199 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. பவர்ப்ளெவில் அதிரடி காட்டிய இஷான் 5 சிக்ஸர், 7 ஃபோர்களுடன் 69 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்த அபார வெற்றிக்கு பிறகு கேப்டன் ஹர்திக் பாண்டியா வெற்றியின் காரணத்தை குறித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில், “இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவது நல்லது தான், நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்ற விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இம்பாக்ட் பிளேயராக சூர்யாகுமார் எங்களுக்கு தேவைப்பட்டதால் கூடுதல் பந்துவீச்சாளரைப் பயன்படுத்த முடிந்தது. அது எங்களுக்கும் மேலும் ஒரு பாதுகாப்பாக அமைந்தது.

இந்த போட்டியில் குறிப்பாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரின் பேட்டிங் எங்களுக்கு வெற்றியைத் தேடி தந்தது. மேலும் இது போன்ற ஒரு போட்டியில், அந்த போட்டியை சீக்கிரம் முடிப்பது எங்களுக்கு முக்கியமான ஒன்றாகும் ரன் ரேட் இதில் தான் சிறப்பாக உயரும். அதுதான் எங்கள் அணியின் அழகு, இந்த போட்டியில் விளையாடிய எங்கள் அணி வீரர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நன்றாக தெரிந்தது.

மேலும், பும்ரா போல தனித்திறன் கொண்ட பவுலர் என் பக்கம் இருப்பது பாக்கியம். சூர்யாகுமாரின் சிறப்பான ஆட்டத்தை விவரிக்க ஒன்றுமே இல்லை அவர் அதை மீண்டும் மீண்டும் செய்கிறார். அவர் நிறைய பயிற்சி செய்கிறார் மற்றும் ஒவ்வொரு போட்டியிலும் அனுபவத்தின் அளவு மேலும் அவருக்கு கூடிக்கொண்டே இருக்கிறது அது அவருக்கு மேலும் நம்பிக்கை கொடுக்கும். இதை நான் அவர் அரைசதம் அடித்தபோது அவரிடம் கூறினேன்”, என்று போட்டி முடிந்த பிறகு ஹர்திக் பாண்டிய பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்