விநாயகர் சதுர்த்திக்கு தளபதி விருந்து…வெங்கட் பிரபு அறிவிப்பு.!
The GOAT: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘The GOAT’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிக்கும் ‘G.O.A.T.’ திரைப்படம், வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் டைட்டிலுடன் வெளியிட்டனர்.
இப்பொழுது, அறிவிக்கப்பட்டுள்ள ரிலீஸ் தேதியின்படி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. நீண்ட விடுமுறையை குறி வைத்து படக்குழு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில், சினேகா, பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாகாஷி சவுத்ரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரித்துள்ளார்.
டைம் டிராவல் கதை களத்தில் உருவாகும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.