கூகுள் போட்டோஸ் கொண்டு வந்த AI டூல்ஸ் ..! இனி காசு இல்ல ஃப்ரீ தான் ..!
Google Photos : முன்னதாகவே அதிக எடிட்டிங் திறன் கொண்டு இருந்தது தான் கூகுள் ஃபோட்டோஸ். தற்போது இந்த கூகுள் ஃபோட்டோஸ்ஸில் மேலும் எடிட்டிங் திறனை அதிகரிக்க AI டூல்ஸை இதில் கொண்டு வந்துள்ளனர்.
நாம் எல்லாரும் விரும்பி எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்கு நிறைய எடிட்டிங் ஆப்ஸ் பயன்படுத்தி அப்புகைபடத்தை நன்கு எடிட் செய்து அதன் பிறகு அதனை சமூகதளத்தில் பதிவிடுவோம். அப்படி எடிட் செய்து கொடுப்பதில் கூகுள் போட்டோஸ் ஒரு சிறந்த எடிட்டிங் சாஃப்ட்வேர் என்று சொல்லலாம். தற்போது, அதில் AI டூல்ஸ்ஸை தற்போது அதிகப்படுத்தியதுடன் அதனை இலவசமாக வருகிற மே-5 முதல் பயனர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளனர்.
இதில் சரியான எடிட்டிங் கருவிகள் மூலம், உங்கள் புகைப்படங்களை வேறு தரத்திற்கு எடிட்டிங் செய்ய முடியும். உதாரணித்தற்கு போட்டோவில் பின்னாடி இருக்கும் தேவை இல்லாத பொருள்களை கூட அகற்றகலாம். மேலும், மங்கலாக எடுக்கப்பட்ட புகைப்படம் கூட இதில் உள்ள கருவிகளை பயன்படுத்தி தெளிவாக்கி கொள்ளலாம் என கூறியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு, இதே போல கூகுள் பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோவில் மேஜிக் எடிட்டரை கூகுள் அறிமுகப்படுத்தியது.
அதாவது இந்த கருவியின் மூலம் பொருளை இடமாற்றம் செய்தல் அல்லது போட்டோ பின்னில் இருக்கும் வானத்தை வேறு நிறங்களில் மாற்றுவது போன்ற சிக்கல் கொண்ட ஸ்வாரஸ்யமான எடிட்டிங் செய்ய இந்த AI-ஐ பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். தற்போது, இது போன்ற AI கருவிகளோடு இன்னும் வேறு எடிட்டிங் கருவிகளை இணைத்து கூகுள் போட்டோஸ்ஸில் அதுவும் இலவசமாக கொண்டு வர உள்ளனர்.
இதை பற்றி கூகுள் அதிகாரப்பூர்வமாக நேற்று, “வருகிற மே-15 முதல், மேஜிக் அழிப்பான் மற்றும் போட்டோ அன்ப்ளர் (Photo Unblur) போன்ற AI-ஆல் இயங்கும் எடிட்டிங் கருவிகளை கூகுள் போட்டோஸுக்கு வர உள்ளது. இதன் மூலம் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கு ஒரு தரமான எடிட்டிங்கை வழங்க முடியும். இதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது”, என்று கூகுள் நிறுவனம் தங்களது X தளத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், ஆண்ட்ராய்டு மற்றும் iOS-சில் பயன்படுத்தும் Google Photos பயனர்களுக்கு மாதத்திற்கு 10 முறை மேஜிக் எடிட்டர் மூலம் புகைப்படங்களை எடிட் செய்து கொள்ளலாம். இந்த வரம்பை முற்றிலும் பெறுவதற்கு ப்ரீமியர் கூகுள் ஒன் (Premium Google One) திட்டம் தேவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Starting May 15, you’ll be able to give your photos a next-level edit with our AI-powered editing tools like Magic Eraser and Photo Unblur on @GooglePhotos — no subscription required ↓ https://t.co/fA7Uo2xXZA
— Google (@Google) April 10, 2024