ரியான் பராக்கு ஈகோ ரொம்ப அதிகம்! பிராட் ஹாக் பேச்சு!

Brad Hogg

Riyan Parag : ரியான் பராக்க்கு அதிகமாக ஈகோ இருப்பதாக பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரியான் பராக் அசத்தலான பார்மில் இருக்கிறார். அவரைப்போலவே  ராஜஸ்தான் அணியும் சிறப்பான பார்மில் இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இதுவரை 4 போட்டியில் விளையாடி எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிவிவர பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அதைப்போல, 4 போட்டியில் விளையாடி ரியான் பராக் 185 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.

ரியான் பராக் பார்ம் குறித்து பல கிரிக்கெட் வீரர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் ரியான் பராக்  பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ரியான் பராக்கை பார்க்கும்போது எனக்கு ரொம்பவே அவரை பிடிக்கிறது. அவருடைய பேட்டிங் என்னை கவர்ந்து இருக்கிறது.  கடந்த ஆண்டை விட அவர் இந்த ஆண்டு சிறப்பான பார்மில் இருப்பதாக நினைக்கிறன்.

கடந்த ஆண்டு அவருக்கு கொஞ்சம் ஈகோ இருந்தது என்று நினைக்கிறேன். ஈகோ இன்னும் இருக்கிறது. இதை நான் மரியாதைக் குறைவாகச் சொல்லவில்லை. அவருடைய விளையாட்டை வைத்து நல்ல விதமாக நான் சொல்கிறேன். அவர் அவர் மீதே அதிகமான நம்பிக்கையை வைத்து இருக்கிறார். அணியில் தனது இடத்தை பிடிக்கவேண்டும் என்று விளையாட முயற்சிப்பதை விட அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி இப்போது அவர் கவலைப்படுகிறார்.

ஒரு கிரிக்கெட் வீரருக்கு அது கண்டிப்பாக அதிகமாகவே இருக்கவேண்டும். அதனை நினைத்து சரியாக ரியான் பராக் விளையாடிக்கொண்டு வருகிறார். அவரை போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கூட இந்த சீசனில் அருமையாக விளையாடி வருகிறது. இந்த சீசன் இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் அருமையாக விளையாடி வருகிறது. இதனை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் பிராட் ஹாக்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்