விசிகவின் புதிய யுத்தி… டிஜிட்டல் முறையை கையில் எடுத்த திருமாவளவன்!

vck

VCK: மக்களவை தேர்தலை முன்னிட்டு புதிய யுத்தியை கையில் எடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் அனல் பறக்க இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தங்களது வேட்பளர்களையும், கூட்டணி கட்சிகளின் வேட்பார்களையும் ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் சிலர் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி புதிய யுத்தியை கையில் எடுத்துள்ளது. அதாவது, தங்களது கட்சி, வாக்குறுதிகள் மற்றும் கருத்துக்களை மக்களிடம் எளிதாக கொண்டு செல்லும் வகையில் டிஜிட்டல் முறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் விசிக தலைவர் திருமாவளவன்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக சிதம்பரம், விழுப்புரத்தில் போட்டியிடுகிறது. சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன், கடந்த ஒரு வாரமாக மக்களை சந்தித்து தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் இளைஞர்களையும், மக்களையும் கவரும் விதமாக டிஜிட்டல் முறையில் ‘கியூஆர் கோடு’ மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, சமீபத்தில் தான் இந்த கியூஆர் கோடு பிரச்சாரத்தை விசிக தலைவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து தேர்தல் பிரச்சார வாசகங்களுடன், கியூஆர் கோடு இடம்பெற்ற போஸ்டர்கள் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த கியூஆர் கோடு’-ஐ செல்போனில் ஸ்கேன் செய்தால், திருமாவளவன் பேசும் வீடியோ ஒன்று  ஒளிபரப்பாகும்.

அதில், மக்களவை தேர்தலின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்துரைப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரின் டிஜிட்டல் பிரச்சாரத்திற்கான கியூஆர் கோடு போஸ்டர் பிரச்சாரத்தை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார். பல்வேறு முறைகளில் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில் விசிக டிஜிட்டல் யுத்தியை கையில் எடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்