ரம்யா கிருஷ்ணின் கணவர் முதலில் இந்த நடிகையை காதலித்தாரா?பயில்வான் சொன்ன சிக்ரெட்!

Bayilvan Ranganathan : ரம்யா கிருஷ்ணின் கணவர் முதலில் பானுபிரியாவை காதலித்ததாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை பற்றி பேசுவதை பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ரம்யா கிருஷ்ணின் கணவர் கிருஷ்ண வம்சி நடிகை பானுபிரியாவை துரத்தி துரத்தி காதலித்ததாகவும், இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவும் நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகை பானுபிரியா முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருந்த காலத்திலே அதாவது 1998 காலகட்டத்திலே ஆதர்ஷ் கௌஷல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2005-ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டாராம்.

பானுபிரியா திருமணம் செய்துகொண்ட காலத்தில் சில காலங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தாராம். அதன்பிறகு விவாகரத்து செய்து கொண்ட பிறகு தான் மீண்டும் படங்களில் நடிக்க வந்தாராம். அப்படி திரும்பி வந்த பிறகு பானுபிரியாவை ரம்யா கிருஷ்ணின் கணவரும், இயக்குனருமான  கிருஷ்ண வம்சி பானுபிரியாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டாராம்.

கிருஷ்ண வம்சி நடிகை ரம்யா கிருஷ்ணனை கடந்த 2003-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே ரம்யா கிருஷ்ணனை அவர் திருமணம் செய்துகொண்டு இருந்தாலும் கூட பானுபிரியாவை  கிருஷ்ண வம்சி  இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள நினைத்தாராம். இருந்தாலும் நடிகை பானுப்ரியா அவர் மீது ஆர்வம் காட்டவில்லையாம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்