‘அவர் மீண்டும் வரும் போது பணிச்சுமையை கண்காணிப்போம்’ ! மயாங்க் யாதவ்க்கு அப்படி என்ன ஆச்சு ?

Mayank Yadav [file image]

ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் மயாங்க் யாதவின் காயம் குறித்தும் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்பதை குறித்தும் லக்னோ அணியின் பயிற்சியாளர் வினோத் பிஸ்ட் விளக்கி கூறி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் கலக்கி கொண்டு வரும் இளம் வேக பந்து வீச்சாளர் தான் மயாங்க் யாதவ். இவர் வீசும் 150 – 156 கி.மீ வேகத்திற்கு எதிர்த்து எந்த ஒரு பேட்ஸ்மேனாளும் ஈடு கொடுத்து நிற்க முடியாமல் தடுமாறினார்கள். லக்னோ அணி விளையாடிய கடைசி 3 போட்டிகளில் 2 போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடிய மயாங்க் யாதவ் தொடர்ந்து இரண்டு முறை ஆட்டநாயகன் விருதை பெற்றிருந்தார்.

ஐபிஎல் தொடரில் ஒரு இளம் வீரர் அறிமுகமான முதல் போட்டியிலும், அதற்கு அடுத்த போட்டியிலும் தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும். ஆனால், கடைசியாக குஜராத் அணியுடனான போட்டியில் அவர் வெறும் 1 ஓவரை மட்டும் வீசி இருந்தார். அந்த 1 ஓவரிலும் இவர் சாதரண வேகத்திலே பந்து வீசி இருப்பார். அதாவது சராசரியாக அந்த ஓவரை 140 கி.மீ வேகத்திலும், 139 கீ.மீ வேகத்திலுமே வீசி இருப்பார்.

அதன் பின் காயம் காரணமாக அவர் அந்த போட்டியில் இருந்து வெளியேறியவுடன் அதன் பிறகு அந்த போட்டியில் பந்து வீசி இருக்க மாட்டார். இதனை பற்றி விவரிக்க லக்னோ அணியின் பயிற்சியாளரான வினோத் பிசிட் கடைசி போட்டி முடிந்த அடுத்த நாள் பத்திரிகையாளர்களிடம் பேசி இருந்தார். அவர் பேசுகையில், “மயங்க் யாதவ் அடிவயிற்றின் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது, அந்த காயத்தின் வலி அதிகரித்ததால் அநத போட்டியில் அதன் பிறகு அவர் பந்து வீசவில்லை.

அடுத்த போட்டியில் விளையாட அவரும், அவருடன் நாங்களும் ஆர்வகமாக இருக்கிறோம். ஆனால், அந்த காயத்தை பொறுத்து அவர் அடுத்த போட்டியில் விளையாட வைப்போம். மேலும், அவர் மீண்டும் அணியில் விளையாடும் போது, அவரது பணிச்சுமையையும் நாங்கள் தொடர்ந்து  கண்காணிப்போம். அவரை விரைவில் களத்தில் பார்ப்போம் என்று நம்புகிறோம்”, என்று லக்னோ அணியின் பயிற்சியாளரான வினோத் பிசிட் பத்திரிகையாளர்களிடம் பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்