அந்த சத்தம்! தோனி என்ட்ரி பார்த்து அதிர்ந்து போன ஆண்ட்ரே ரஸ்ஸல்!

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் கொடுத்த சவுண்டை பார்த்து ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிர்ந்துபோனார்.
நேற்று சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை மட்டுமே எடுத்தது.
அடுத்ததாக களமிறங்கிய சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முன்னதாக சென்னை வீரர் தோனி 18 பந்துகளில் 3 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் களமிறங்கினார். தோனி மைதானத்திற்குள் வந்தவுடன் ரசிகர்கள் தல எனவும் தோனி எனவும் கத்தி கரகோஷமிட்டனர்.
நேற்று நடைபெற்ற போட்டி மட்டுமில்லை எப்போதுமே சேப்பாக் மைதானத்தில் போட்டி நடைபெற்று அதில் தோனி விளையாடினாள் போதும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு கொடுக்கும் ஆதரவை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. ஆனால், இதுவரை நடைபெற்ற போட்டிகளை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு நேற்று தோனி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தனர்.
தோனி உள்ளே வந்ததும் ஜெயிலர் படத்தில் இடம்பெற்று இருந்த Hukum பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதைப்போல, மைதானத்தில் இருந்த அனைவரும் தோனி….தோனி…. தோனி….தோனி…. என கரகோஷமிட்டனர். இந்த சத்தத்தை கேட்ட எதிரணி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் காதில் கையை வைத்து கொண்டு சத்தத்தை தாங்கமுடியாமல் அடைத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The craze on the arrival of MS Dhoni.????
Andre Russell had to close his ears when MS Dhoni arrived at the crease.❤️????❤️????❤️????❤️????❤️????❤️????#CSKvKKR #GautamGambhir Thalapathy jaddu CSK vs KKR Chepauk pic.twitter.com/oIOm66sn7s— Shining Bharat ???????? (@UNIQUE_BOY_SITU) April 8, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025