சிவாஜி பட ஷூட்டிங்கில் பயங்கர டென்ஷனான ரஜினிகாந்த்! காரணம் என்ன தெரியுமா?

sivaji movie

Rajinikanth : சிவாஜி படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் மிகவும் டென்ஷன் ஆகியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே அதிகமாக கோபப்படமாட்டார் என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால், சிவாஜி படத்தின் சமயத்தில் ரஜினிகாந்த் ரொம்பவே டென்ஷனானாராம். அதுவும் காரணத்துடன் தான் கோபப்பட்டாராம். சிவாஜி திரைப்படத்தை ஷங்கர் இயக்க படத்தை AVM  நிறுவனம் தான் தயாரித்து இருந்தது.

AVM நிறுவனம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் இருந்தே பல படங்களில் நடித்து இருக்கிறார். எனவே, அந்த நிறுவனத்திற்கும் ரஜினிகாந்திற்கு நல்ல பழக்கம் இருக்கிறது. எனவே, ஒரு முறை சிவாஜி படத்தின் ஷூட்டிங் சமயத்தில் கேரவன் வந்ததாம். அப்போது எதற்கு இந்த கேரவன் யாருக்கு? என செம டென்ஷனானாராம்.

உடனடியாக தயாரிப்பாளர் AVM சரவணன் உங்களுக்கு தான் இந்த கேரவன் ரஜினி என்று அவரிடம் கூறினாராம். இதனை கேட்டவுடன் கடுப்பான ரஜினிகாந்த் என்ன இது புது பழக்கம் 30 வருடங்களாக நான் AVM நிறுவனம்  தயாரிப்பில் படம் நடித்து கொண்டு இருக்கிறேன். என்னைக்காவது கேரவன் வேண்டும் என்று கேட்டு இருக்கிறேனா? திடீரென எதற்கு எனக்கு கேரவன் என்று கோபப்பட்டாராம்.

பிறகு எனக்கு கேரவன் எல்லாம் வேண்டாம் எனக்கு AVM நிறுவனம்   ஸ்டுடியோவில் ரூம் இருக்கிறது நான் அங்கே தங்கிவிடுகிறேன் என்று ரஜினிகாந்த் கூறினாராம். இந்த தகவலை தயாரிப்பாளர் AVM சரவணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் மாதிரி ஒரு எளிமையான மனிதரை யாருமே பார்க்க முடியாது என்றும் பாராட்டி பேசியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்