90 வாட் சார்ஜிங்! தாறுமாறான அம்சங்களுடன் வருகிறது ரெட்மி டர்போ 3!

redmi turbo 3

Redmi Turbo 3 : ரெட்மி டர்போ 3  போன் சீனாவில் எப்போது அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ரெட்மி டர்போ 3  போன் எப்போது அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் தகவல்களாக வெளியாகும் போதே பல நல்ல சிறப்பு அம்சங்களை கொண்டிருந்த காரணத்தால் இந்த போன் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் அதிகமாக இருந்தது. அப்படி என்னென்ன அம்சங்கள் எல்லாம் இந்த போனில் இருக்கிறது எப்போது அறிமுகம் ஆகும் என்பதை விவரமாக பார்க்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

  •  இந்த ரெட்மி டர்போ 3 போனின் கேமராவை பற்றி நாம் பார்க்கையில் Sony IMX882 50-மெகாபிக்சல் முதன்மை கேமராவையும், 8-மெகாபிக்சல் IMX355 அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே புகைப்படம் எடுக்க விரும்புபவர்களுக்கு இந்த போன் கண்டிப்பாக பிடிக்கலாம்.
  • இந்த போன் ஆனது 5000mAh பேட்டரி வசதியுடன் வருகிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இருக்கிறது. எனவே, சார்ஜ் குறைந்துவிட்டது என்றால் கூட நீங்கள் விரைவாகவே சார்ஜ் செய்துகொள்ளலாம்.
  • இந்த போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரையில் 6.67 இன்ச் ஓஎல்இடி (OLED) உடன் வருகிறது. அத்துடன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. எனவே படங்கள் அல்லது வீடியோக்கள் நீங்கள் பார்க்கும்போது ஒரு நல்ல உணர்வை கொடுக்கும்.
  • மேலும், இந்த ரெட்மி டர்போ 3 போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இயங்குகிறது. அதைப்போல, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல்(Octa Core Snapdragon 8s Gen 3 SoC) சிப்செட் அம்சத்தை  கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் என்றால் கேம் பிரியர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் அதிலும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன்  வெர்ஷன் என்றால் கண்டிப்பாக இந்த போன் கேம் விளையாடுவதற்கும் நன்றாக இருக்கும்.
  •  16ஜிபி ரேம் மற்றும் 1டிபி  ஸ்டோரேஜ் வசதி உடன் வரும் என தெரிகிறது. அதைப்போல இரண்டு சிம்கார்டுகளை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  •  அதைப்போல, 2 ஸ்பீக்கர் அம்சம் மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும்  (WiFi 7) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் உடன் வருகிறது.
  • கலர்களை பொறுத்தவரையில் பச்சை (Green), கருப்பு (Black) மற்றும் தங்கம் (Gold) ஆகிய கலர்களில் வருகிறது.

அறிமுகம் மற்றும் விலை?

இப்படியான அட்டகாசமான சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த போன் ஆனது ஏப்ரல் 10 புதன்கிழமை சீனாவில் அறிமுகம் ஆகவுள்ளது. சீனாவில் அறிமுகம் ஆன பிறகு தான் இந்தியா உட்பட சில நாடுகளில் விற்பனைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. விலையை பொறுத்தவரையில், சீனாவில் இந்த போன் 30,000 க்கு அறிமுகம் ஆக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  எனவே, சீனாவில் அந்த விலை என்றால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது விலையில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்