டீம்ல இதை செஞ்சா இன்னைக்கு சிஎஸ்கே வெற்றி கன்ஃபார்ம்! சபாஷ் சரியான கணிப்பு!

CSK Fan Theory[file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில்  2 தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை அணி இன்று நடைபெறும் கொல்கத்தா அணியுடனான போட்டியில் வெற்றி பெற இந்த அணியில் இதை செய்தால் போதுமானது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கடந்த போட்டியில் சென்னை அணி ஹைதராபாத் அணியை சந்தித்து தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் சென்னை அணியின் சிறப்பான பவுலர்களான முஸ்தபிஸுர் ரஹ்மானும், மதிஷா பத்திரானவும் அணியில் இடம் பெறாமல் போனதே அந்த தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், சென்னை அணியின் பயிற்சியாளரான பிளெமிங் பத்திரானாவின் உடல் நிலையை பற்றி கூறுகையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரை ஹைதராபாத் போட்டியிலும் விளையாட வைக்க சற்று தயங்குகிறோம் என்று கூறினார்.

ஹைதராபாத் உடனான போட்டியில் விளையாட வைத்துவிட்டு முழுவதுமாக இந்த ஐபிஎல் தொடரில் அவரை இழக்க நாங்கள் தயாராக இல்லை என்றும் கூறினார். இதனால், இன்றைய போட்டியில் பத்திரான விளையாடுவது சற்று புதிராகவே இருந்து வருகிறது. அதே நேரம் கடந்த போட்டியில் விளையாடாமல் இருந்த முஸ்திபிஸுர் ரஹ்மான் இன்றைய போட்டியில் மீண்டும் அணியில் இணைய  உள்ளார் என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில், சென்னை அணி ரசிகர்கள் கடந்த இரு போட்டிகளில் செய்த தவறினை இந்த போட்டியில் செய்யக்கூடாது என பலரும் பலவித கணிப்புகளை சமூக தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதில் முக்கியமான கணிப்பாக அணியில் சில மாற்றங்களை செய்யலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். சென்னை அணிக்காக கடந்த போட்டியில் மிகவும் மோசமாக பந்து வீசிய முகேஷ் சவுத்ரியை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ராஜ்வர்தன் கங்கர்கேகருக்கு இந்த ஒரு போட்டியில் ஒரு வாய்ப்பளித்து பார்க்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதே போல பேட்ஸ்மானாக களமிறங்கும் டேரில் மிட்சேல்லை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஷைக் ரஷீத், நிஷாந்த் சிந்து போன்ற இளம் பேட்ஸ்மேன் யாருக்குவது வாய்ப்பளிக்கலாம் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், ஏற்கனவே அணியில் விளையாடும் ருதுராஜ், ரச்சின் ரவீந்திரா, ஜடேஜா, சஹர் போன்ற முன்னணி வீரர்கள் இன்னும் உத்வேகத்துடன் அணியில் செயல்பட வேண்டும் என்பதும் ரசிகர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.

இது வரை நடைபெற்ற 4 போட்டிகளிலும் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் பொறுப்பாக விளையாடவில்லை இதனால் இன்றைய போட்டியில் தொடக்க வீரர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், எதிர்த்து விளையாடும் அணி கொல்கத்தா அணி என்பதால் போட்டி இன்று கடுமையாக இருக்கும் என்றும் ஒரு வேளை முஸ்தபிஸுரும், பத்திரானவும் விளையாடவில்லை என்றாலும் ரசிகர்கள் கணித்துள்ள இந்த அணி கண்டிப்பாக இந்த போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்று கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்