இனி 4-வது விக்கெட்டுக்கு இவர் தான் ..! ஷிவம் துபேக்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு ?
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருக்கும் சிவம் துபே வருகிற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பங்கேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
2024 ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை நான்கு போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த 4 போட்டிகளிலும் சென்னை அணி 2 போட்டிகளில் தோற்றாலும், சிவம் துபே சிறப்பாக விளையாடி உள்ளார். அவர் இதுவரை இந்து 4 போட்டிகளில் 148 ரன்கள் குவித்துள்ளார். மேலும், அவரது ஸ்ட்ரைக் கிரேட் 160 ஆக உள்ளது.
கடந்த 2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சிவம் துபே அதிரடியாக விளையாடி இருந்தார், அந்த அதிரடி ஆட்டத்தால் அவருக்கு இந்திய அணியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரிலும் அதிரடியாக ஆடி இருந்தார். அதன் பிறகு இந்த் ஐபிஎல் தொடரிலும் அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார்.
இதே ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் உடன் இவரது ஸ்ட்ரைக் ரேட்டை ஒப்பிட்டு பார்க்கையில் இவரது ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் வருகிற டி20 உலகக்கோப்பை தொடரில் இவரை 4-வது விக்கெட்டுக்கு விளையாட வைக்குமாறு சமூக தளத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்.
அதே நேரம், இந்திய அணியின் முன்னாள் இடது கை பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் சிவம் துபேவை விளையாட வைக்க வேண்டும் அவரது கருத்தையும் X தளத்தில் பகிர்ந்திருந்தார். இதனால், சிவம் துபேவுக்கு ஒரு வருகிற டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்குமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இவர் இடது கை அதிரடி பேட்ஸ்மேன் என்பதால் ஒரு கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.