SGPGIMS: அரசு மருத்துவ கல்லூரியில் வேலை வாய்ப்பு.!

SGPGIMS 2024

SGPGIMS: சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கழகம் (SGPGIMS) குரூப் பி மற்றும் காலியாக உள்ள நர்சிங் அதிகாரி (NO), ஸ்டோர் கீப்பர், ஸ்டெனோகிராபர், OT உதவியாளர், வரவேற்பாளர், MLT, சானிட்டரி இன்ஸ்பெக்டர் போன்ற பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மார்ச் 7  அன்று அறிவிக்கப்பட்ட இந்த பணிக்கான விண்ணப்பத் தேதிகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை, விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி மற்றும் நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான SGPGIMS என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

காலியிட விவரங்கள்

  1. இளைய பொறியாளர் -1
  2. மூத்த நிர்வாக உதவியாளர் – 40
  3. ஸ்டோர் கீப்பர் – 22
  4. ஸ்டெனோகிராபர் – 84
  5. வரவேற்பாளர் – 19
  6. நர்சிங் அதிகாரி – 1426
  7. பெர்ஃப்யூஷனிஸ்ட் – 5
  8. தொழில்நுட்பவியலாளர் – 15
  9. மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் – 21
  10. தொழில்நுட்ப வல்லுநர் (கதிரியக்கவியல்)-8
  11. தொழில்நுட்ப உதவியாளர் – 3
  12. ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் – 3
  13. ஜூனியர் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் – 3
  14. அணு மருத்துவ தொழில்நுட்பவியலாளர் -7
  15. தொழில்நுட்ப வல்லுநர் (டயாலிசிஸ்) -37
  16. OT உதவியாளர் – 81
  17. சுகாதார ஆய்வாளர் – 8
  18. CSSD Asstt – 20

வயது

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், அரசாங்க விதிமுறைகளின்படி வயது தளர்வு அளிக்கப்படுகிறது.

கல்வி தகுதி

நர்சிங் அதிகாரி பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் நர்சிங்கில் இளங்கலை பட்டம் முடித்திருக்க  வேண்டும்.

கொடுக்கப்பட்டுள்ள தகுதி மற்றும் பிற விவரங்களை கவனமாக படிக்கவும்.மேலே குறிப்பிட்ட காலியிடங்களுக்கான சரியான விவரங்கள் எப்போது வெளியிடப்படும் என்பதை அறிய, அதிகாரப்பூர்வ SGPGIMS-ன் அறிவிப்பைப் பார்க்கவும்.

மேலும் இது குறித்து கூடதல் விவரங்களுக்கு விரிவான அறிவிப்பு விரைவில் வழங்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்