வெயிலா இருந்தாலும் சரி கேப்டன் விஜயகாந்த் அப்படியே நிப்பாரு! வியந்து பேசிய பிரபலம்!
Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் பற்றி தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
சினிமாத்துறையில் கேப்டன் விஜயகாந்த் பற்றி பாராட்டதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படங்களில் டூப் போடாமல் நடிப்பதில் இருந்து பிரபலங்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்தது வரைக்கும் கேப்டனை பலரும் பாராட்டி தான் பேசி இருக்கிறார்கள். அந்த வகையில், விஜயகாந்துடன் பல படங்களில் பணியாற்றிய தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய தினேஷ் ” விஜயகாந்த் பெரிய அளவில் தன்னுடைய படங்களில் டூப் காட்சிகளே போடா மாட்டார். எவ்வளவு பெரிய ரிஸ்க்கான காட்சிக்கள் வந்தாலும் அந்த காட்சிகளில் அவரே நடிக்கவேண்டும் என்று விரும்ப படுவார். அந்த அளவிற்கு சினிமா மீது அதிகம் ஒரு ஆர்வம் கொண்ட நபர்.படப்பிடிப்பிற்கு சொன்ன நேரத்திற்கு முன்னாடியே வந்து படப்பிடிப்பு தளத்தில் காத்திருப்பார்.
8 மணிக்கு வந்தாலும் அன்று இரவு 8 மணி வரை கூட சோர்வாகாமல் படப்பிடிப்பு தளத்திலே இருப்பார். வெயில் நேரத்தில் படப்பிடிப்பு என்றாலும் மழை நேரம் என்றாலும் அதில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விஜயகாந்த் நிற்பார். அதைப்போல இயக்குனர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாலும் சரி அவர்களிடம் அமர்ந்து எல்லாம் பேசவே மாட்டார். எழுந்து நின்று மரியாதையாக தன பேசுவார்.
சண்டைக்காட்சிகள் எடுக்கும்போது அவர் டூப் போடமாட்டார் ஆனால், அவருக்கு அந்த அளவிற்கு அடிபடாது ஏனென்றால் அதனை பற்றி தெரியாதவர்களுக்கு மட்டும் தான் அடிபடும். கேப்டன் அப்படி இல்லை சண்டை பயிற்சியாளர்களை ஓரம் கட்டி ஒரு படி மேலே சென்றுவிடுவார். அவரை போல நல்ல நடிகரையும், நல்ல மனிதரையும் பார்க்கவே முடியாது” எனவும் தினேஷ் மாஸ்டர் கூறியுள்ளார்.