திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்.!
![DMK MLA Pugazhendi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/04/DMK-MLA-Pugazhendi.webp)
DMK MLA Pugazhendi : விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்.
திமுக எம்எல்ஏ புகழேந்தி தற்போது உடல்நிலை குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்தார் என்ற சோக செய்தி கிடைத்துள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி, நேற்று இரவு விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். அதன் தொடர்ந்து எம்எல்ஏ புகழேந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.
அவருக்கு ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு உடல்நலக்குறைவு தீவிரமடைந்ததை அடுத்து, எம்எல்ஏ புகழேந்தி, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தல் நேரத்தில் இப்படியான துயர செய்தி கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)