இது நடந்தால் கச்சத்தீவு மட்டுமல்ல இந்தியாவே மீட்கப்படும் – செல்வப்பெருந்தகை

Selvaperunthagai

Election2024: இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கச்சத்தீவு மட்டுமல்ல இந்தியாவே மீட்கப்படும் என்று செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், விருதுகரில் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது, மாநிலங்களின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்காமல், சுயாட்சி வழங்க வேண்டும்.

குறிப்பாக நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் திணிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தற்கொலைகளில் பாஜக விளையாடி கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக காங்கிரேசின் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது. நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள், ஏழைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழ்நாடு காங்கிரேசின் தேர்தல் அறிக்கை வரும் 8ம் தேதி வெளியிட உள்ளோம். இதனால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கச்சத்தீவு மட்டுமல்ல இந்தியாவே மீட்கப்படும்.

ஜனநாயகத்தின் மனசாட்சி தான் இந்தியா கூட்டணி, பாசிச ஆட்சியை அகற்றுவதற்கான கூட்டணி. ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று இந்திய மக்கள் மனதில் இருக்கிறது என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை தேமுதிக மற்றும் சரத் குமாரை விமர்சித்தார்.

அவர் கூறியதாவது, காமராஜர் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்த நடிகர் சரத்குமார் காமராஜரை கொலை செய்ய முயன்றவர்களோடு கூட்டு வைத்துள்ளாரே எப்படி? என கேள்வி எழுப்பி விமர்சித்தார். இதுபோன்று, ஒட்டும் இல்லை உறவும் இல்லை என கூறிய மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் ஆன்மா அதிமுகவின் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவை மனிக்குமா எனவும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested