விஜய் – மிருணால் நடித்த ‘பேமிலி ஸ்டார்’ படத்தின் முதல் நாள் வசூல்.!

Family Star

Family Star box office: நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூர் நடித்துள்ள ‘பேமிலி ஸ்டார்’ திரைப்படம் முதல் நாளில் 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இயக்குனர் பரசுராம் பெட்லா இயக்கிய இப்படம் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையை பற்றியும் காதல் கலந்த குடும்ப திரைப்படமாகவும் உருவாகியுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாக்கூர் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

முதல் நாளில், இப்படம் 5.75 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால், வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்திற்குப் பிறகு, இயக்குனர் பரசுராம் பெட்லா உடன் இரண்டாவது முறையாக நடிகர் விஜய் தேவரகொண்டா இணைந்துள்ள படம் இது.

மேலும் இந்த படத்தில் அபிநயா, வாசுகி, ரோகினி ஹட்டங்கடி மற்றும் ரவி பாபு உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடிக, திவ்யன்ஷா கௌசிக் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 17042025
Vijay -Waqf Amendment Bill
Munaf Patel FINE
Dhankar
TVK Booth Committee
Madurai Temple Festival
amit shah edappadi palanisamy selvaperunthagai