கேப்டன் விஜயகாந்த் முதன் முதலில் வாங்கிய சொத்து! விலை எவ்வளவு தெரியுமா?

Vijayakanth

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் முதன் முதலாக வாங்கிய சொத்து விலை பற்றிய விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

கேப்டன் விஜயகாந்திற்கு இருக்கும் சொத்துமதிப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இருந்தாலும் அவர் முதன் முதலாக சம்பாதித்து முதல் முறை வங்கியை சொத்து எவ்வளவு அது எங்க வாங்கினார் என்று பலருக்கும் தெரியாது. அவர்களுக்காகவே விஜயகாந்த் முன்னணி நடிகராக இருந்தபோது முதன் முதலாக வாங்கிய சொத்தை பற்றி அவருடன் படங்களில் பணியாற்றிய சுப்புராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” கேப்டன் விஜயகாந்த் இப்போது இல்லாதது மிகவும் வேதனையாக இருக்கிறது . அவர் முதன் முதலாக வாங்கிய சொத்து மதிப்பு நன்றாக தெரியும். ஜனவரி 1 என்ற ஒரு படத்தில் நடிக்க அவர் கமிட் ஆனார். அந்த படத்தில் நடிக்க அவருக்கு 1 சம்பளம் லட்சம் கொடுத்தார்கள். இது நடந்தது 1983 ஆம் ஆண்டு.

அப்போது அந்த படத்தில் நடிக்க வாங்கிய அந்த 1 லட்சம் ரூபாய் பணத்தில் விஜயகாந்த் சென்னை சாலிகிராமத்தில் ஒரு இடம் வாங்கினார். பெரிய இடம். ஆனால், அந்த இடத்தில் பழைய கட்டிடம் ஒன்று இருந்தது. அதை சரி செய்து அதில் தான் தங்கினோம். அந்த இடம் முழுக்க கழுத்து நிறைய தண்ணீர் இருக்கும் அங்கு போகவேண்டும் என்றால் சட்டையை எல்லாம் கழட்டிவிட்டு தான் நான் மேலே சென்று தங்குவேன்.

அந்த தண்ணீருக்குள் இருந்து பாம்பு எல்லாம் வரும் அத்தனை நான் கேப்டனிடம் சொன்னால் என்னை நக்கல் செய்வார். கேப்டன் விஜயகாந்த் முதல் முதலாக வாங்கிய சொத்து அதுதான். அதன்பிறகு தான் அடுத்ததாக அந்த பகுதியில் விஜயகாந்த் இடங்களை வாங்கினார்” எனவும் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்