ரசிகர்களை பதற வைக்கிறாரா அஜித்? நல்ல அப்டேட் இல்லையா? பிரபலம் சரமாரி கேள்வி.!
Vidaa Muyarchi: விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ வைத்து சினிமா விமர்சகர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட் எப்போடா வெளியாகும் என ஏக்கமாக காத்திருந்த ரசிகர்களுக்கு, நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ நேற்றைய தினம் வெளியானது.
நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தான், விடாமுயற்சிபடப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சியின் பதற வைக்கும் விபத்து வீடியோக்களைப் பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார்.
வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சி நவம்பர் 2023-ல் படமாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில், வில்லன் ஆரவ் உடன் அதிவேகமாக செல்லும்போது நிலை தடுமாறி, கார் கவிழ்ந்ததை அடுத்து, படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் அனைவரும் காரை நோக்கி ஓடுகின்றனர்.
இந்த பதற வைக்கும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்பொழுது, இந்த வீடியோ குறித்து பிரபல சினிமா விமர்சகரான அந்தனன், “விடாமுயற்சி படத்தில் இருந்து நல்ல அப்டேட் எப்போடா வெளியாகும் என காத்திருந்தனர். எப்போ பார்த்தாலும் அஜித் கீழே விழுந்தார் என்கிற செய்தியை மட்டும் வெளியாகிறது.
எப்போ பார்த்தாலும் அவரது படத்தின் அப்டேட் என்று ரசிகர்கள் கேட்டலே, அஜித் கீழே விழுந்த அப்டேட் தான் வெளியாகிறது. இத்தனை நாள் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. எவ்வளவு நல்ல ட்டில்ஸ் இருக்கும், நல்ல காட்சிகள் இருக்கும்.நல்ல அப்டேட் இல்லையா? இதை பார்த்து ரசிகர்கள் பதற்ற படுறாங்க” என்று சரமாரியாக கேள்வி எழுப்பி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
— ValaiPechu Anthanan (@Anthanan_Offl) April 5, 2024