‘கேட்ச்சை விட்டதால் மேட்சை விட்டு விட்டோம்’ – தோல்வியின் காரணம் குறித்து சுப்மன் கில் !

Subhman Gill [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு தோல்வியடைந்தது குறித்து குஜராத் டைட்டன்ஸ் கேப்டனான சுப்மன் கில் பேசி இருந்தார்.

ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியாக குஜராத் அணியும், பஞ்சாப் அணியும் நேற்றைய போட்டியில் விளையாடினார்கள். இதில் நன்றாக விளையாடிய பஞ்சாப் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றி பெற்றது. இந்த போட்டியின் தோல்வி அடைந்ததை பற்றி போட்டி முடிந்த பிறகு சுப்மன் கில் பேசி இருந்தார்.

அவர் பேசுகையில், “நாங்கள் கைக்கு வந்த கேட்சுகளை தவறவிட்டது  தான் எங்கள் தோல்வியின் முதல் காரணமாகும், கிடைத்த கேட்சை பிடிக்காமல் போனதால் கையில் இருந்த போட்டியானது உண்மையில் எங்களைப் பின்னுக்குத் தள்ளியது. ஆனால், அப்படி இருந்தும் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் அவர்களது வேலையைச் சிறப்பாகச் செய்தார்கள். மேலும், இது போன்ற பெரிய இலக்கை நிர்ணயிக்கும் போது மைதானத்தில் பனியின் தாக்கம் அதிகம் இருப்பதால் பந்து வீசவும் சவாலாக அமைகிறது.

நாங்கள் 20 ரன்கள் குறைவாக இருந்தோம் என்று நான் சொல்லமாட்டேன். இது ஒரு நல்ல இலக்கு தான். எங்கள் இன்னிங்ஸ்ஸின் தொடக்கத்தில்  பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. அதன் பிறகு சரியான ஸ்விங் கிடைக்கவில்லை. எங்களுக்கு இப்போதும் தொடரில் முன்னேறுவதற்கு சமயம் இருக்கிறது. 15-வது ஓவர் வரை போட்டி எங்கள் கைக்குள் இருந்தது, அதன் பிறகு தவறவிட்ட கேட்சுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

மேலும், இறுதி ஓவரில் தர்சன் நன்றாக பந்து வீசினர். அவரையும் பந்து வீச முன்னாடி கொண்டு வந்திருக்கலாம், அவர் ஒரு நல்ல ஈடுபாடுடன் விளையாடும் பந்து வீச்சாளர் ஆவார்”, என்று போட்டிக்கு பிறகு தோல்வி அடைந்த காரணம் குறித்து குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்