தண்ணீர் இன்றி பயிர்கள் கருகிவிடுமோ..!!அச்சத்தில் விவசாயிகள்

Default Image

திருவாரூர் மாவட்டத்தில் ஆறு களில் நீர்வரத்து குறைந்து விளை நிலங்களுக்கு தண்ணீர் செல்லாத தால் சம்பா பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் ஆற்றுப் பாசனத்தை நம்பி சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணி நடைபெற்றுள்ளது. தெளிப்பு மற்றும் நடவு செய்து 30 நாட்களே ஆன பயிர்களே பெருமளவில் உள்ளன. அண்மையில் கேரளா, கர்நாடகா பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அதிக அளவு நீர்வரத்து இருந்ததால் உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட்டு அனைத்து ஆறுகளிலும் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த ஆண்டு சம்பா பருவத் துக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்த நிலையில், முக்கொம்பு மேலணை உடைந்ததன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுவிட்டது.

முக்கொம்பில் தற்காலிக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருவாரூர் மாவட்ட ஆறுகளில் சிறிதளவே தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால், கிளை வாய்க்கால் களுக்கு தண்ணீர் பாயவில்லை. மாவட்டத்தின் பல ஆறுகள் வறண்ட நிலையிலேயே காணப்படு கின்றன. இதனால் சம்பா பயிர்கள் கருகத் தொடங்கிவிட்டன. பல பகுதிகளில் சூறை நோய் தாக்கு தல் தென்படுகிறது. அதற்கு மருந்து அடித்து நீர் பாய்ச்ச முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

இதுகுறித்து திருவாரூரைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் கூறியபோது, ‘‘தண்ணீர் இன்றி பயிர்கள் கருகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். ஏற்கெனவே குறுவை சாகுபடியும் நடைபெறாத நிலையில் ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் அனை வரும் பெரும் பொருளாதார பின்னடைவில் உள்ளோம். கூட்டுறவு கடன் கிடைக்காமல் தனியாரிடம் கடன்பெற்று சாகுபடி செய்துள்ளோம். அப்படி நட்ட பயிர்களும் கருகிவிட்டால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என்பதால், இதைக் கவனத்தில்கொண்டு திரு வாரூர் மாவட்டத்துக்கு தண்ணீர் வந்துசேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்