இதை சொல்லி மிரட்டிய பாஜக… ஜெயலலிதா போல் தைரியமான முடிவெடுத்த பிரேமலதா!

Premalatha Vijayakanth

Premalatha: பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தல் கொடுத்ததாக பிரேமலதா விஜயகாந்த் பரப்பரப்பு குற்றசாட்டு.

மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அரசியல் கட்சி தலைவர்கள் மாறி மாறி குற்றசாட்டுகளை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்பரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் நல்லதம்பியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பொன்னேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூறியதாவது, அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெரும்.

2021ல் வர வேண்டிய வெற்றி 2026ல் உறுதியாக வரும். இந்த தேர்தல் ஒரு சரித்திர சாதனையாக இருக்கும். பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்கவோம் என பாஜக அச்சுறுத்தினார்கள். அதிமுக அலுவலகம் சென்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்துயிடும் வரை பாஜகவில் இருந்து நிறைய மிரட்டல், நிர்பந்தம் வந்த வண்ணம் இருந்தது.

ஆனால், எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல் தைரியமாக முடிவெடுத்தேன். இந்த முறை அதிமுகவுடன் தான் கூட்டணி என்று தைரியமாக உறுதியாக இருந்தேன். எவ்வளவோ பயம் காட்டினார்கள், ஆனா இந்த பணக்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது. எதனை சோதனைகள் வந்தாலும், மிரட்டல்கள் வந்தாலும் இதனை கண்டு கேப்டனும் சரி, நானும் சரி அஞ்சமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்