புன்னகை மன்னன் மொத்த பாடல்களை இளையராஜா எத்தனை நிமிடத்தில் முடித்தார் தெரியுமா?

punnagai mannan ilayaraja

Ilaiyaraaja : புன்னகை மன்னன் படத்தின் பாடல்களை இளையராஜா எத்தனை மணி நேரத்தில் இசையமைத்துள்ளார் என்பதற்கான தகவல் கிடைத்து இருக்கிறது.

இசையமைப்பாளர் இளையராஜா பல ஹிட் படங்களின் பாடல்களை சில மணி நேரங்களில் இசையமைத்து கொடுத்துவிடுவார் என்பது அனைவர்க்கும் தெரியும். இதனை அவருடன் படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் பேட்டிகளில் தெரிவித்தது உண்டு. அப்படி அவர் சில மணி நேரங்களில் இசையமைத்து கொடுத்த படங்களின் பாடல்கள் அதிரி புதிரியாகவும் ஹிட் ஆகி இருக்கிறது.

அப்படி ஒரு திரைப்படம் தான் இயக்குனர் கே. பாலசந்தர் இயக்கத்தில் கடந்த 1986-ஆம் ஆண்டு வெளிவந்த புன்னகை மன்னன் கூட. இந்த படத்தில் கமல்ஹாசன், ரேவதி மேனன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.

படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பின்னணி இசையையும், இப்போது வரை பலருடைய பேவரைட்டாக இருக்கிறது என்றே சொல்லவேண்டும். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் கேட்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த பாடலை எல்லாம் இளையராஜா பல நாட்கள் இசையமைத்து இருப்பார் என்று தானே நாம் எல்லாம் நினைத்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால் , அது தான் இல்லை. இந்த படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களையும் இளையராஜா அரை மணி நேரத்தில் இசையமைத்து கொடுத்து அசத்திவிட்டாராம். இந்த தகவலை பிரபல இயக்குனரான சுரேஷ் கிருஷ்னா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” புன்னகை மன்னன் பாடல் வேண்டும் என்று இளையராஜாவை பார்ப்பதற்கு நான் கே. பாலசந்தர் உடன் மதுரைக்கு சென்று இருந்தேன்.

ஒரு ரூமில் இளையராஜா இருந்தார் மற்றோரு ரூமில் வைரமுத்து சார் இருந்தார். படத்தின் பாடல்கள் இடம்பெறும் கதையை அவரிடம் சொல்லிவிட்டு நாங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றோம். கோவிலுக்கு போய் அரை மணி நேரத்தில் எங்களுக்கு போன் வருது போன் எடுத்து பேசினால் பாடல்கள் ரெடி என்று இளையராஜா கூறினார். அரை மணி நேரத்தில் 6 பாடல்களை இசையமைத்து கொடுத்தார் எல்லா பாடல்களும் ஹிட். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது” எனவும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்னா  கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்