2000 ஆண்டில் இடுப்பழகி சிம்ரன் வாங்கிய சம்பளம்? கேக்கவே பிரமிப்பா இருக்கே!

simran salary

Simran : 2000 காலகட்டத்தில் நடிகை சிம்ரன் வாங்கிய சம்பளம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சிம்ரன். கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான V. I. P. திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் அடுத்ததாக ஒன்ஸ் மோர், நேர்க்கு நேர், பூச்சூடவா உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டு இருந்தார். பிறகு விஜய்க்கு ஜோடியாக துள்ளாத மனமும் துள்ளும், அஜித்திற்கு ஜோடியாக வாலி படங்களில்  நடித்ததும் இவருடைய மார்க்கெட் சற்று உயர்ந்தது என்றே சொல்லலாம்.

அந்த சமயம் எல்லாம் இவருடைய அசத்தலான நடனத்தை பார்த்து இவருடைய ரசிகர்கள் ஆகாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். இவருடைய நடனத்தை பார்த்து ரசிகர்கள் இவருக்கு அன்பாக வைத்த பெயர் இடுப்பழகி. 90ஸ் காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இவர் வளம் வந்துகொண்டு இருந்தார்.

90ஸ் காலத்தில் மட்டுமின்றி 2000 காலகட்டத்திலும் கலக்கி கொண்டு இருந்தார். குறிப்பாக 2000 காலகட்டத்தில் கோபிண்டி அல்லுடு, காளிசுந்தம் ரா, உன்னைக் கொடு என்னைத் தருவேன், அன்னய்யா, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், யுவராஜு, நுவ்வு வஸ்தாவனி உள்ளிட்ட பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். அந்த சமயம் எல்லாம் அதிகமாக சம்பளம் வாங்கிய நடிகையாகவும் சிம்ரன் தான் இருந்தாராம்.

கிட்டத்தட்ட அந்த சமயம் சிம்ரன் மிகவும் பீக்கில் இருந்த காரணத்தால் ஒரு படத்திற்கு 50 முதல் 60 லட்சம் வரை சம்பளம் வாங்கினாராம். அந்த சமயம் இந்த சம்பளம் மிகவும் பெரிய தொகை என்றே சொல்லலாம். அப்போதே சிம்ரன் ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பது பிரமிக்க வைத்து இருக்கிறது. மேலும், இப்போது சிம்ரனுக்கு வயதான காரணத்தால் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 17042025
BJP Former state leader Annamalai - TN Minister Sekarbabu
edappadi and amit shah Nainar Nagendran
ADMK MP Thambidurai say about ADMK - BJP Alliance
d jeyakumar about bjp
Mitchell Starc About RR
gold price today