மயிலாடுதுறை நகரில் சிறுத்தை நடமாட்டம்… தனியார் பள்ளிக்கு விடுமுறை!

Mayiladuthurai: மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தனியார் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றிரவு செம்மங்குளம் என்ற பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதாவது, சிறுத்தையின் கால் தடம் இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

பொதுமக்கள் புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதன்பின் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் வீடுகளை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் எனவும் காவல்துறை கூறியுள்ளது. எனவே, செம்மங்குளம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது சிசிடிவி காட்சியில் தெரியவந்ததால் பொது மக்கள் அச்சத்திலும், பீதியிலும் உள்ளனர். இதனால், சிறுத்தையை பிடிக்க காவல்துறையும், வனத்துறையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே, சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட செம்மங்குளம்அருகே உள்ள தனியார் பள்ளி இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செம்மங்குளம் அருகே உள்ள பால சரவஸ்வதி மெட்ரிக் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார்.