சூப்பர் டா கண்ணா! ஆரஞ்சு கேப் கொடுத்து அம்மாவை நெகிழ வைத்த ரியான் பராக் !

Riyan Parag [file image]

ஐபிஎல் 2024 : நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்து ஆரஞ்சு கேப் பெற்ற ரியான் பராக் அவரது அம்மாவிடம் கொடுத்து நெகிழவைத்துள்ளார்.

நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரரான ரியான் பராக் நேற்றைய மும்பை உடனான போட்டியில் அரை சதம் கடந்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.  ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்து முன்னிலையில் இருந்து வரும் வீரர்களுக்கு ஆரஞ்ச் கேப் கொடுத்து பெருமை அழிப்பது வழக்கமாகும்.

தற்போது, நேற்று நடந்த மும்பை, ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற காரணமாய் இருந்த ரியான் பாரக் இந்த ஆரஞ்சு கேப்பை வென்றுள்ளார். இவர் நேற்றைய போட்டியில் 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்த ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 181 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப்பை பெற்றதுடன் பட்டியலில் முதலிடத்தில்இருந்து வருகிறார்.

நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ராஸ்தான் வீரர்கள் ஓய்வு எடுக்க செல்லும் ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது ரியான் பார்க் தனது தாயிடம் தான் பெற்ற ஆரஞ்சு கேப்பை கொடுத்தார். அதை கண்ட அவரது தாய் மனம் நெகிழ்ந்து அவரை கட்டி அனைத்து, அவரது கன்னத்தில் மற்றும் நெற்றியில் முத்தமிட்டு தனது அன்பை அவர் வெளிப்படுத்தினார்.

இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருவதுடன் பார்ப்பவர்களை மனம் நெகிழ செய்துள்ளது, மேலும் கிரிக்கெட்டை வாழ்க்கையாக வைத்து முன்னோக்கி செல்லும் இளம் வீரர்களுக்கு இது ஒரு ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. ரியான் பாரக் 2019 -ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிக்காக விளையாடி வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்