தக் லைஃப் படத்தில் நடிக்க த்ரிஷா வாங்கிய சம்பளம் எத்தனை கோடிகள் தெரியுமா?
Trisha : தக்லைஃப் படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா சம்பளமாக 12 கோடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் வந்தாலும் த்ரிஷாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும் என்றே சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு படங்களில் அவர் நடிக்கவில்லை என்றாலும் கூட, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து மீண்டும் சினிமாவில் சூப்பரான ரீ எண்டரி கொடுத்தார் என்றே கூறலாம்.
பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் வெளியாகி த்ரிஷாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே கூறலாம். இதன் காரணமாகவே அவருக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது என்றே சொல்லலாம். பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக லியோ படத்திலும் அவர் நடித்து இருந்தார்.
லியோ படமும் அவருக்கு வெற்றியை கொடுத்துள்ள நிலையில், அடுத்ததாக அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி படத்திலும் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார். இதில் அவர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, தக் லைஃப் படத்தில் நடித்ததற்காக நடிகை த்ரிஷா சம்பளமாக 12 கோடி வாங்கி இருக்கிறாராம். த்ரிஷாவின் மார்க்கெட் தற்போது மிகவும் உச்சத்தில் இருப்பதன் காரணமாக அவர் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. தக் லைஃப் படத்தை தொடர்ந்து த்ரிஷாவுக்கு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அட்லீ இயக்கும் படத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.