அடேங்கப்பா..!தினமும் மோர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Butter milk-மோர் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
மோரின் நன்மைகள் :
- மோர் தையிரிலிருந்து பிரித்து எடுக்கப்படும் பானமாகும் .கால் லிட்டர் மோரில் 260 மில்லி கால்சியம் சத்து உள்ளது.தையிரிலிருந்து முறையாக வெண்ணையை பிரித்து எடுப்பது தான் மோர் ,அதற்கு மாற்றாக தற்போது தயிரை மிக்ஸியில் அடித்து கிடைப்பது அல்ல .
- உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் உணவுகளை குறைவாகத்தான் எடுத்துக் கொள்வார்கள் ,அப்போது அவர்களுக்கு சத்துக்களும் குறைவாக கிடைக்கும். இந்தப் பற்றாக்குறையை தீர்க்க ஒரு கிளாஸ் மோர் அருந்துவது நல்ல தீர்வாக இருக்கும்.
- மோரில் உள்ள எலெக்ட்ரோலைட்கள் உடல் வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளும்.கலோரி மற்றும் கொழுப்பு மிக குறைவு .
- தினமும் நாம் மோர் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும், உடல் சூடு மற்றும் தாகம் குறையும்.
- மோரில் உள்ள ரிபோபிளவின் சத்து அல்சர் புண், வாய்ப்புண்களை ஆற்ற உதவும் .அதனால் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் .
- மோர் குடிப்பதன் மூலம் கொழுப்புகள் கரைக்கப்படும் ,செரிமானம் தொந்தரவு இல்லாமல் நடக்கும்.மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
- கார உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது நெஞ்செரிச்சல் ஏற்படும், அந்த சமயங்களில் ஒரு கிளாஸ் மோர் எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வாக அமையும்.
- சில நேரங்களில் அதிக உணவுகளை உட்கொள்ளும் போது வயிறு மந்தமாக இருக்கும், அந்த நேரங்களில் மோர் குடித்தால் உணவுகளில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்பட்டு வயிறு லேசாகும்.
- தினமும் மோரை குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும் ,முகப்பருக்கள் வராமல் பாதுகாக்கவும் செய்யும்.உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் .
மோரில் நம் உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது ஆகவே தினமும் உணவுக்குப் பின் எடுத்துக் கொண்டால் அதன் எண்ணற்ற பலன்களை பெற முடியும்.