ஐபிஎல் 2024 : ஒன்று கூடும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ..!! ஐபிஎல்லின் அடுத்த கட்ட திட்டம் என்ன ..?
![IPL Owners Meeting [file image]](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/04/IPL-Owners-Meeting-file-image.webp)
ஐபிஎல் 2024 : வருகிற ஏப்ரல்-16 ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் சந்திப்பு.
ஐபிஎல் தொடரின் 31-வது போட்டியாக ஏப்ரல் 16-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெறுகிறது. அன்று நடைபெறுகிற இந்த போட்டியின் போது ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஒன்றாக சந்தித்து பேச உள்ளதாக தற்போது ஐபிஎல் சி.இ.ஓ (CEO) ஆன ஹேமங் அமீன் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார் .
இந்த சந்திப்பு ஐபிஎல்லில் நிலவி வரும் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை தீர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக இந்த சந்திப்பு வர விருக்கும் மெகா ஐபிஎல் ஏலத்தை பற்றியும் விவாதிக்க உள்ளதாக தெரிகிறது என்று ஊடகங்கள் வாயிலாக தெரிகிறது. மேலும், ஐபிஎல்லின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கில் இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது,
இந்த சந்திப்பிற்கு பத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அதனால், 10 அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் CEO-க்கள் மற்றும் குழுவினர்களோடு கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. மேலும், இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமால் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பிற்கான முக்கிய காரணம் ஏலத்தின் போது அணிகள் தங்களது பிரபலமான வீரர்களை தக்க வைத்து கொள்வது, அதிக காசு கொடுத்து எடுக்கும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளாமல் இருப்பது, மேலும் ஐபிஎல் தொடரை முன்னோக்கி கொண்டு போக அடுத்தகட்ட நடவடிக்கை போன்ற விஷயங்களையும் விவாதிக்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025