நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ..!

Saranya [file image]

Saranya Povannan : தமிழ் திரை பிரபலமான நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது ஸ்ரீதேவி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் அம்மா வேடம் என்றாலே நம் பலருக்கும் நினைவு வருவது சரண்யாவை தான். அவரை தாண்டி எவராலும் ஒரு அம்மாவின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த முடியாது. இவர் தனுஷ், அஜித், விமல், ஜீவா போன்ற தமிழ் ஹீரோக்களுக்கு படங்களில் அம்மாவாக நடித்து பிரபலமான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

இதை தொடர்ந்து, இவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஸ்ரீதேவி என்பவர் தற்போது சரண்யா மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சரண்யாவின் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஸ்ரீதேவி என்பவர் அவரது வீட்டின் கதவை திறந்த போது வெளியில் நின்ற சரண்யாவின் காரில் அந்த கதவு உரசுவது போல் சென்றுருக்கிறது.

இதனால் இரு குடும்பத்தினருக்கும்  தகராறு ஏற்பட்டுள்ளது, இதன் விளைவால் காவல் நிலையத்தில் சரண்யா குறித்து புகார் எழுந்துள்ளது. சரண்யா தனது காரை ஸ்ரீதேவியின் வீட்டிற்கு வெளியில் நிறுத்தி உள்ளார். அப்போது 20 அடி நீளம் உள்ள ஸ்ரீதேவி வீட்டின் கதவானது திறக்கும் போது சரண்யாவின் காரில் உரசுவது போல் வேகமாக சென்றுள்ளது. இதில், வாய் தகராறில் ஆரம்பித்த இந்த வாக்குவாதம் போக போக  இருதரப்புக்கும் இடையே தகராறு பெரியதாகியதாக மாறியதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து சரண்யா குடும்பத்தினர், ஸ்ரீதேவியின் வீட்க்குள் சென்று அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறி விருகம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் சரண்யா பொன்வண்ணன் மீது ஸ்ரீதேவி குடும்பத்தினர் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து விருகம்பாக்கம் போலீசார் சரண்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
E-pass
sunita williams
ashwani kumar HARDIK
Commercial cylinder price
ashwani kumar
MI vs KKR - IPL 2025 (1)