ஐபிஎல் 2024 : வெற்றிக்கு பிறகு ரிஷப் பண்ட்டுக்கு அபராதம் ..!! ஏன் தெரியுமா ?

Rishab Pant [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றிக்கு பிறகு, டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி சென்னை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் அட்டகாசமாக விளையாடி அரை சதம் அடித்து வெற்றிக்கான முக்கிய காரணமாக திகழ்ந்தார். அவர் சிறப்பாக விளையாடி, 32 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன்  51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு டெல்லி அணியின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது, இதன் மூலம் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு பிறகு ஐபிஎல் நடத்தை விதிகளை (IPL Code of Conduct) மீறி செயல்பட்டதாக கூறி டெல்லி அணியின் கேப்டன் பண்ட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் செய்யும் போது டெல்லி அணி வீரர்கள் மெதுவாக ஓவர்களை வீசினார்கள். ஐபிஎல்லில் குறிப்பிட்ட நேரத்திற்குள், பந்து வீசும் அணி பந்து வீசி முடிக்க வேண்டும் இல்லை என்றால் கடைசி ஓவரில் 30-யார்ட் சர்க்கிளுக்கு (30 Yard Circle) வெளியில் 4 ஃபீல்டர்கள் மட்டுமே நிற்க வேண்டும் என்பது விதி.

இந்த போட்டியில் இதை செய்ய தவறிய டெல்லி அணியின் கேப்டனான பண்ட்டுக்கு, ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதன் பெயரில் தற்போது ரூ.12 லட்சம் அபராதமாக விதித்துள்ளது பிசிசிஐ நிறுவனம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்