”எடப்பாடி அதிரடி” இரவு நேர சந்திப்பா..? ” ஆலோசனையில் தமிழக முதல்வர் ”…அமைசரவையில் மாற்றம்..!!

Default Image
சென்னை ,
தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.  இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் குட்கா விற்பனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடப்பதாக மத்திய வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் சென்றன. அதன்பேரில் சென்னை செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த எம்.டி.எம். குட்கா ஆலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அந்த ஆலையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் தயாரிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு விற்பனை ஆவதும் வெளிச்சத்துக்கு வந்தது.
Image result for குட்கா ஆலை
குட்கா ஆலை பங்குதாரர் மாதவராவ் வீட்டிலும், குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாதவராவ் உதவியாளர் வீட்டில் இருந்து ரகசிய டைரி ஒன்று சிக்கியது.
அந்த டைரியில் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக மாநகராட்சி உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவரம் இடம் பெற்று இருந்தது.
ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் எந்தெந்த தேதிகளில் எத்தனை லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற விவரமும் துல்லியமாக எழுதப்பட்டு இருந்தது.
அதிகாரிகள் துணையோடு குட்கா விற்ற வகையில் எவ்வளவு வரி கட்டப்பட்டு இருக்கிறது என்ற குறிப்புகளும் இருந்தன. இந்த டைரி தகவல்தான் அதிகாரிகள் சிக்குவதற்கு ஆதாரமாக அமைந்தது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும் அந்த டைரியில் இடம் பெற்று இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் உள்பட 23 அதிகாரிகளுக்கு ரூ.60 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 கோடி லஞ்சம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக குட்கா பங்குதாரர் மாதவராவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மாதாமாதம் தவிர தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும் லஞ்சம் கொடுத்து இருப்பதாக வருமான வரித்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கடிதம் எழுதி இருந்தார்.
இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பெயரளவுக்கு விசாரணை நடத்தி சில போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
Image result for சி.பி.ஐ.
அதன்பேரில் சி.பி.ஐ. சார்பில் பெயர் குறிப்பிடாமல் கலால் துறை, உணவு பாதுகாப்புத் துறை, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை நடந்து இருப்பதால் இது தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்குப்பதிவு செய்தது. இதிலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.
சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள். சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் குட்கா ஊழல் தொடர்பாக ஏராளமான தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்தது. எனவே சி.பி.ஐ.யின் அடுத்த அதிரடி எந்த நேரத்திலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு காலை 8 மணிக்கு 5 அதிகாரிகள் சென்றனர். வீட்டை பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் முகப்பேர் மேற்கில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.
நொளம்பூர் புதிய போலீஸ் நிலையம் அருகில் உள்ள அவரது வீட்டில் 10 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குட்கா ஊழலில் பரபரப்பாக பேசப்பட்ட முன்னாள் போலீஸ் கமி‌ஷனரான ஜார்ஜின் வீட்டிலும் சோதனை நடந்தது.
Image result for போலீஸ் கமி‌ஷனரான ஜார்ஜின்
நொளம்பூர் பாரிசாலையில் உள்ள அவரது வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இங்கு 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் இருவரது வீடுகளும் ஒரே பகுதியில் அமைந்துள்ளன. இதனால் இன்று நடைபெற்ற இந்த சோதனை அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
சென்னை போலீஸ் வட்டாரத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகள் மட்டத்திலும் சி.பி.ஐ. நடத்திய இந்த அதிரடி வேட்டை உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டி.ஜி.பி.யாக பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பதும், அது தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பதும், தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் , குட்கா முறைகேட்டில் அமைச்சர் விஜய பாஸ்கர் , காவல்த்துறை உயர் அதிகாரிகள் சேர்க்கப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில் , அவர்களை இன்னும் பணியிலும் , பதவியிலும் நீட்டிக்க அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் , உயரதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக ,திமுக ,தாமாக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
Related image
இது குறித்து தமிழக முதல்வர் காலை ஆலோசனை கூட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடதக்கது.மேலும் இது குறித்து முதலமைச்சர் மூத்த அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தெருக்கிறது.அவர்கள்;இந்த ஆலோசனை படி அமைச்சர் விஜயபாஸ்கர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி யை இன்று இரவு சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி விலகுவதாக தெரிகின்றது.இது தமிழக அரசியலில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகின்ற்றது..
DINASUVADU 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்