சிக்கலில் சூர்யா எடுத்த முடிவு? கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த ரகசியம் இது தான்!
Suriya 44 : சூர்யா 44 படத்திற்கான திடீர் அறிவிப்பு வந்தது ஏன் என்பதற்கான தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இன்றயை காலகட்டத்தில் ஒரு படத்தின் அப்டேட் வெளியாக போகிறது என்றால் முன்னதாகவே தகவல்களாக கசிந்துவிடும். ஆனால், அப்படியான தகவல்கள் எதுவும் இல்லாமல் திடீரென வந்த அறிவிப்பு சூர்யாவின் 44-வது படத்தினை பற்றி தான். சூர்யாவின் 44-வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாகவும் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வந்தது.
இந்த அப்டேட் ரசிகர்கள் பலருக்கும் சர்ப்ரைஸ்ஆக இருந்தது. விரைவில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில், இந்த படத்திற்கான திடீர் அப்டேட் வெளிவந்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், சூர்யா இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் 1 வாரத்துக்கு முன்பு தான் படத்தின் கதையை கேட்டாராம்.
ஒரு வாரத்திற்கு முன்பு தான் படத்தின் கதையை கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது படம் பண்ணலாம் என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டதாம். கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்பதற்கு முன்பு நடிகர் சூர்யா அயலான் படத்தின் இயக்குனர் ரவிக்குமாரிடம் தான் ஒரு படத்தின் கைதையை கேட்டாராம்.
ரவிக்குமார் கூறிய கதை சரியில்லை என சூர்யா கூறிவிட்டாராம். அந்த கதையை இயக்குனர் ரவிக்குமார் 4 வருடங்கள் எழுதி இருந்தாராம். எனவே, சூர்யா இப்படி கூறிய காரணத்தால் கொஞ்சம் நேரம் எடுத்து கதையில் சில மாற்றங்களை கொண்டு வரவும் இருக்கிறாராம். இதற்கிடையில் ஒரு படத்தை கமிட் செய்தே ஆகவேண்டும் என்ற காரணத்தால் முழுமையான கதை வைத்து இருக்கும் ஒரு இயக்குனரை தேடிக்கொண்டு இருந்தாராம்.
அப்போது தான் கார்த்திக் சுப்புராஜ் கதை வைத்து இருப்பதை சூர்யாவின் நெருக்கமானவர்கள் கூறினார்களாம். உடனடியாக கார்த்திக் சுப்புராஜை நேரில் அழைத்து சூர்யா கதைகேட்டராம். அவர் சொன்ன அந்த கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்து போக உடனடியாகவே சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதன் காரணமாக தான் திடீரென சூர்யா 44 படத்திற்கான அறிவிப்பு வந்தது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.