அண்ணாமலை, செல்வகணபதி வேட்புமனுக்கள் ஏற்பு.! அதிமுக பரபரப்பு புகார்.!

Selvaganapathy - K Annamalai

Election2024 : திமுக வேட்பாளர் செல்வகணபதி, பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்பு சட்டவிரோதமானது என அதிமுக புகார்.

கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி  மற்றும் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆகியோரின் வேட்புமனுக்கள் பல்வேறு பரபரப்புக்கு மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேற்கண்ட இருவரின் வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டது குறித்து அதிமுக குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

வேட்புமனுக்களை ஏற்றது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் கிறது அதிமுக வழக்கறிஞர் இன்பதுரைசெய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனுவும், கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனுவும் தாக்கல் செய்ததில் தவறு உள்ளது.

திமுக வேட்பாளர் செல்வகணபதி குற்றபின்னணி பற்றி குறிப்பிடவில்லை. அவர் மீது இரண்டு வழக்குகள் இருந்தது. அதில் தண்டனையும் பெற்றார். பின்னர் வேறு நீதிமன்றத்திற்கு சென்று விடுதலை ஆனார். அது பற்றிய தகவல் எதுவுமே செல்வ கணபதி வேட்புமனுவில் குறிப்பிடப்படவில்லை. அதனால், செல்வ கணபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஒருவேளை அவர் வெற்றி பெற்றாலும் கூட அவரது வெற்றி செல்லாது.

இன்னொன்று, கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை தாக்கல் செய்தபோது, முதலில் நீதிமன்றத்திற்கு பணம் செலுத்தி வாங்கப்படும் பத்திரத்தில் தான் வேட்புமனு தாக்கல் செய்தார். முறையாக தேர்தல் ஆணையத்திற்கு பணம் செலுத்தி வாங்கப்படும் படிவத்தை அவர் பெறவில்லை. இதனால் அவரது வேட்புமனுவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.

இதுபற்றி அதிகாரி கூறுகையில், அவர் ஏற்கனவே இன்னொரு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் எனக்கூறி வேட்புமனுவை ஏற்றுக் கொண்டனர். அப்படி அவர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். ஒவ்வொரு நாளும் வேட்புமனு தாக்கல்  பற்றிய விவரங்கள் மாலையில் வெளியிடப்படும். அவ்வாறு எதுவும் கோவை மாவட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்படவில்லை. இது குறித்தும் நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளோம் என்றும் அதிமுக தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை சேத்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்