இன்னும் பிஞ்சு போன செருப்பை விடலையா.? சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை.!

BJP State President K Annamalai

Annamalai : ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில் அண்ணாமலை பிரச்சாரம் செய்யும் போது இந்தி எதிர்ப்பு பற்றி தவறாக பேசியதாக அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

மக்களவை தேர்தல் தமிழகத்தில் நெருங்கி வருவதால், தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகமெங்கும் களைகட்ட ஆரம்பித்துள்ளன. அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்கள் மற்ற கட்சிகள் பற்றி காரசார விமர்சனங்ளை முன்வைத்து வருகிறார்கள்

ஸ்ரீபெரும்புதூரில், பாஜக கூட்டணி சார்பாக தமாகா வேட்பாளர் வேணுகோபால் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அவர் பேசுகையில், நாட்டின் முன்னேற்றத்தை பற்றி பேச வேண்டும். ஆனால், இங்குள்ள தலைவர்கள் இன்னும் 1980களில் பேசுவதை போலவே இன்னும் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறர்கள்.

அப்போதைய கால கட்டம் போலவே, இன்னும் இந்தி, சமஸ்கிருதம், வடக்கு தெற்கு என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் அந்த “பிஞ்ச செருப்பை” கீழ போடவில்லை. என அண்ணாமலை கடுமையாக பேசி இருந்தார். இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

காரணம், இந்தியா முழுக்க ஒரே அலுவல் மொழி என மத்திய அரசு அறிவித்து 1960காலத்தில் இந்தி மொழியை திணிக்க முயற்சித்த போது தமிழகத்தில் பலர் கடுமையாக போராடி, உயிர்தியாகம் செய்து இந்தி மொழி திணிப்பபை எதிர்த்தனர்.இப்படியான மொழி திணிப்பு போராட்டங்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார் என அவருக்கு எதிராக இணையத்தில் கருத்துக்கள் பதியப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் இன்னும் எந்தவித கருத்துக்களும் தெரிவிக்கவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்