புனித வெள்ளி ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? 

Good Friday

Good Friday- புனித வெள்ளி  சிறப்புகள் , இயேசுவுக்கு ஏன்  சிலுவை மரணம் கொடுக்கப்பட்டது என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

புனித வெள்ளி சிறப்புகள் :

  • மார்ச் மாதம் 29ஆம் தேதி இந்த ஆண்டுக்கான புனித வெள்ளி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டருக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது.
  • ஏனென்றால் இயேசு வெள்ளிக்கிழமை உயிர் நீத்ததாகவும், மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழிந்தார் எனவும்  நம்பப்படுகிறது.
  • புனித வெள்ளி என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததையும், அவர் அடைந்த துன்பங்களை நினைவு கூறும் நாளாகும்.
  • மனிதர்களாகிய நம் பாவத்தை போக்குவதற்காக இயேசு தனது உயிரை தியாகம் செய்த நாளாகும்.

இயேசுவுக்கு ஏன் சிலுவை மரணம் தெரியுமா?

இயேசு வாழ்ந்த காலத்தில் ரோமர்கள் குற்றவாளிகளுக்கு ஐந்து விதமான கொடுமையான தண்டனைகளை கொடுப்பது வழக்கம்.

1.கல்லெறிதல்,2. மிருகங்களுக்கு இறையாக்குதல், 3.அக்கினி சூளையில் எரித்தல், 4.வாளால் அறுத்தல், 5.சிலுவையில் அறைதல். இதில் மிகக் கடுமையான தண்டனை சிலுவையில் அறைதல்.

இயேசு சிலுவையில் அறைந்தது ரோமர்களின் அதிகாரத்தால் அல்ல. “மரத்தில் தூக்கப்பட்டவன் எவனும் சபிக்க பட்டவன்  என எழுதி இருப்பதன் படி இயேசு நமக்காக சிலுவையில் அறையப்பட்டது பிதாவாகிய தேவன் முன்பே தீர்மானித்ததினால் தான்.

இப்படி சிலுவையில் அறையப்பட்டதன் மூலம் மனித குலத்திற்கு சில ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்தார். இயேசு சிலுவையில் தொங்கும் போது சில தெய்வீக பரிமாற்றங்கள் பரிமாறப்பட்டது. அவை தான் ஏழு கட்டளைகள் என கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது.

1.இயேசு தண்டிக்கப்பட்டார் ,நாம் மன்னிக்கப்பட்டோம் .

2.நாம் நீதிமான்களாக்கும்படி அவர் பாவமானார்.

3.நாம் ஐஸ்வர்யவன்களாகும்படி  அவர் தரித்திரரானார்  .

4.நமக்கு புகழ்ச்சி அவருக்கு அவமானம்.

5.நமக்கு தேவ சாயல் இயேசுவிற்கு ஆதாமின் சாயல்.

6.இயேசுவிற்கு சிலுவை நமக்கு சிங்காசனம்.

7.இயேசுவிற்கு மரணம் நமக்கு நித்திய ஜீவன்.

இயேசு சிலுவையில் அறைந்த போது இப்படி பல தெய்வீக பரிமாற்றங்கள் மாற்றப்பட்டு பல ஆசிர்வாதங்கள் நமக்கு சொந்தமாக்கப்பட்டது .

ஆகவே நாளைய தினத்தில் இயேசுவின் அன்பை நினைத்துப் பார்ப்போம். அவருக்காக நம்மை அர்ப்பணித்து சாட்சியாக வாழ்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்