நயன்தாராவை மிஞ்சிய த்ரிஷா? ஒரு படத்துக்கு எத்தனை கோடி வாங்குகிறார் தெரியுமா?

trisha Nayanthara

Trisha : சம்பள விஷயத்தில் நடிகை த்ரிஷா நயன்தாராவை மிஞ்சியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் போட்டி இருப்பது போல நடிகைகளுக்கும் போட்டியும் இருக்கிறது என்றே கூறலாம். அப்படி தான் நடிகைகள் த்ரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் தான்  அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளாகவும் இருந்து வருகிறார்கள்.  இதில் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 10 கோடிகளுக்கு  வாங்குவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் நடிகர் த்ரிஷா பொன்னின் செல்வன் படத்திற்கு வரை 6,7 கோடி தான் வாங்கி வந்தார்.

எனவே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாரா தான் முதலிடம் இருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகை  த்ரிஷா அவரை சம்பள விஷயத்தில் மிஞ்சு உள்ளதாக கோலிவுட்வட்டாரத்தில்  கிசுகிசுக்கப்படுகிறது. அதன்படி த்ரிஷா சமீப காலமாக தான் நடிக்கும்  படங்களுக்கு 12 கோடியில் இருந்து 15 கோடி வரை சம்பளம் கேட்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

எனவே கோலிவுட் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் நடிகை த்ரிஷா தான் முதலிடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.த்ரிஷா தனது சம்பளத்தை உயர்த்தியதை தகவலை பார்த்த கோலிவுட் வட்டாரம் அடேங்கப்பா த்ரிஷாவுக்கு இவ்வளவு கோடி சம்பளமா? என ஆச்சரியத்துடன் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மேலும் த்ரிஷா கடைசியாக விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசன் நடித்து வரும் தக்லைஃப்  படத்திலும் சிரஞ்சீவி உடன் ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடிகர் கமிட் ஆகி இருக்கிறார்.  இதில் தக்லைஃப்  படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்