பாண்டியாவை புறக்கணிக்கிறதா மும்பை ? மும்பை அணியில் நடப்பது இதுதான் ..!

Harthik Pandiya [file image]

IPL 2024 : கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதை மிக தாமதமாக புரிந்து கொண்டு விளம்பரங்களில் புறக்கணிக்க தொடங்கி உள்ளதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 8-வது போட்டியில் தற்போது மும்பை இந்தியன்ஸ் இன்று விளையாடியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு விளம்பரம் ஒன்றை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டது. அந்த விளம்பரத்தில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா புகைப்படம் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக நடுவில் ரோஹித் சர்மா புகைப்படமும், அவருக்கு வலது பக்கத்தில் டெவால்ட் ப்ரீவிஸ் , இடது பக்கத்தில் பும்ராவும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி, கேப்டன் ஹர்திக் பாண்டியாவை விளம்பரங்களில் புறக்கணிக்க துவங்கி இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் விளையாடிய முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த மும்பை ரசிகர்கள் அனைவரும் அவருக்கு எதிராக கோஷம் இட தொடங்கினர்.

இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக, மும்பை ரசிகர்கள் மத்தியில் இப்படி எதிர்ப்பு இருந்து வருவது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மிக தாமதமாக தற்போது புரிந்து கொண்டுள்ளது. இதை கண்டுகொள்ளாமல் விட்டால் மும்பை அணியின் ரசிகர்கள் கூட்டம் குறைந்து விடும் என்பதை புரிந்து கொண்ட மும்பை அணி நிர்வாகம் இது போல விளம்பரகங்களில் ஹர்திக் பாண்டியவை புறக்கணித்திருக்கலாம் என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசி வருகின்றனர்.

அது மட்டுமின்றி போட்டியில் குஜராத் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்தததால் ஹர்திக் பாண்டியாவிற்கு மேலும் செல்வாக்கு குறைந்துள்ளதால் மும்பை அணியில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தற்போது ஹர்திக் பாண்டியாவிற்கு புறக்கணிக்கும் விதத்தில் இதை ஒரு முதல் முற்று புள்ளியாக மும்பை அணி நிர்வாகம் வைத்திருக்கலாம் என்று ரசிகர்கள் கலவையாக பேசி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்