அருணாச்சலம் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா?
Arunachalam : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு குபேரன்.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘அருணாச்சலம்’. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். படத்தில் விசு, ரம்பா , கிரேஸி மோகன், ஜனகராஜ், ரகுவரன், பொன்னம்பலம், வடிவுக்கரசி, அஞ்சு அரவிந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரஜினிகாந்த் நடிப்பில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் இந்த படம் அவருடைய சிறந்த படங்களின் பட்டியலில் கண்டிப்பாக இருக்கும் என்றே கூறலாம்.
இந்த படத்திற்கு அந்த சமயமே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த காரணம் தலைப்பு என்று கூறலாம். ஆனால், முதன் முதலாக இந்த திரைப்படத்திற்க்கு அருணாச்சலம் என்று தலைப்பு வைக்கப்படவில்லையாம். முதலில் படத்திற்கு குபேரன் என்று தான் தலைப்பு வைக்கப்பட்டு இருந்ததாம். இந்த தகவலை இயக்குனர் சுராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய இயக்குனர் சுராஜ் ” முதலில் அருணாச்சலம் படத்திற்கு குபேரன் என்று தான் தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், படத்திற்கு குபேரன் என்று தலைப்பு வைக்கப்பட்ட தகவல் வெளியே கசிந்துவிட்டது. எனவே, இதன் காரணமாக தான் நாங்கள் படத்தின் தலைப்பை மாற்றவேண்டிய நிலைமை வந்தது. அதன்பிறகு தலைப்பு லீக் ஆகிட்டு தலைப்பை மாற்றவேண்டும் என்று ரஜினி சார் கூறினார்.
அப்படி கூறிவிட்டு தான் அருணாச்சலம் என்று தலைப்பு அவர் வைக்க சொன்னார். இந்த தலைப்பை வைக்க நானும் சுந்தர் சி பிறகு சிலரும் யோசித்தோம். அதன்பிறகு ரஜினி சாரே சொல்லிவிட்டார் இந்த தலைப்பே வைப்போம் என்று தான் வைத்தோம். அது படத்திற்கு நல்ல தலைப்பாக செட் ஆகிவிட்டது” எனவும் சுராஜ் தெரிவித்துள்ளார். சுராஜ் இந்த திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.