வயசானாலும் நான் சிங்கம்! அசர வைக்கும் தல தோனியின் கேட்ச்..வைரல் வீடியோ..!!

dhoni catch ipl 2024

MS Dhoni : குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் எம்.எஸ். தோனி பிடித்த அசத்தலான கேட்ச் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்று இந்த சீசனில் இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது. இந்த போட்டியில் சென்னை அணி பேட்டிங்கின் போது தோனி கடைசி ஓவரில் சிக்ஸர் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், தோனி களமிறங்கவில்லை எனவே ரசிகர்களுக்கு இது சற்று ஏமாற்றமாக அமைந்தது. அப்படி ஏமாற்றம் அடைந்த ரசிகர்களை மகிழ்விக்க தோனி அசத்தலான கேட்ச் ஒன்றையும் பிடித்து மகிழ்வித்தார். குஜராத் அணி பேட்டிங் செய்த சமயத்தில் விஜய சங்கர் டேரில் மிட்செல்  பந்தை எதிர்கொண்டார்.

அப்போது விஜய சங்கர் அந்த பந்தை மெதுவாக தட்ட முயற்சி செய்த நிலையில் பந்து அவருடைய பேட்டில் பட்டு பின்னாடி இருந்த தோனியிடம் சென்றது. தோனி கிட்ட பந்து சென்றால் அந்த பந்தை தோனி விடுவாரா என்ன? அசத்தலாக டைவ் போட்டு அந்த பந்தை கேட்ச் பிடித்தார். தோனி பிடித்த இந்த அசத்தலான கேட்சை பார்த்து ரசிகர்கள் ‘தோனி…தோனி’ என கரகோஷமிட்டனர்.

தோனி கேட்ச் பிடித்த அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரை பாராட்டியும் வருகிறார்கள். குறிப்பாக தோனி பிடித்த கேட்சை பார்த்துவிட்டு ரெய்னா ” தோனி கேட்ச் அருமை அவர்இப்படி செய்து நம்மளை ஊக்கவைத்து கொண்டு இருக்கிறார்” என பாராட்டினார். அதைப்போல ரசிகர்கள் பலரும் வயது மேட்டர் இல்ல வயசானாலும் அவர் சிங்கம் என்று கூறிவருகிறார்கள்.

மேலும், நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை  அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. அதன் பின் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத்  20 ஓவருக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 63 ரன்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்