எகிறும் எதிர்பார்ப்பு! ஜூனில் அறிமுகமாகிறது பஜாஜ் ஆட்டோவின் முதல் CNG பைக்!

CNG Bike

CNG Bike: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் CNG பைக்கை இந்திய சந்தையில் ஜூன் மாதத்தில் அறிமுக செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

ஆட்டோமொபைல் சந்தையில் பெட்ரோல், டீசல் கார்கள் மற்றும் பைக்குகளை தொடர்ந்து எலெக்ட்ரிக்  வாகனங்களும் அதிகரித்தே வருகிறது. இதில், சிஎன்ஜி எரிபொருள் கொண்டு இயங்கும் கார்களும் அடங்கும். இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம், அதன் முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யும் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் அறிவித்துள்ளார்.

இந்த சிஎன்ஜி எரிபொருள் கொண்டு இயங்கும் கார்களை தொடர்ந்து பைக்குகளும் தற்போது இந்திய சந்தையில் வெளியாக உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதுவும், முதல் முறையாக இந்தியாவில் அறிமுகமாகவுள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் CNG பைக் என்பது உலகிற்கே புதியவையாகும்.

அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயு தான் இந்த சிஎன்ஜி. இந்த எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களில் பெட்ரோல்/ டீசல் பயன்படுத்த தேவை இருக்காது. பஜாஜின் சிஎன்ஜி பைக்கின் காப்புரிமை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த பஜாஜ் சிஎன்ஜி பைக் ‘ப்ரூஸர் 125’ என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது ஒரு 125சிசி பைக்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மாடல் பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர் கொண்டு முன்புறத்தில் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் ஆப்ஷனும் உள்ள நிலையில், டிஜிட்டல் கிளஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை. எனவே, சிஎன்ஜி பைக் பெட்ரோல் மாடல்களை விட சிறப்பான மைலேஜ் வழங்கும் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் விலை ரூ.80,000இல் இருந்து எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi