இன்று வாக்கு சேகரிக்க வரும் முதல்வர்… வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்.!

MK Stalin - Rahul Gandhi - Mallikarjun Kharge

Election2024 : இன்று மாலைக்குள் தமிழகக்தில் மீதம் உள்ள 2 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தீவிரமாக்கியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற உள்ள பிரமாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர்களை முதல்வர் அறிமுகப்படுத்தவுள்ளார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதியும் , புதுச்சேரி 1 தொகுதி என மொத்தம் 10 தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதில், தமிழகத்தில் போட்டியிடும் 9 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால், நெல்லை மற்றும் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

இதுகுறித்து தற்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, இன்று மாலைக்குள் திருநெல்வேலி, மயிலாடுதுறை மாறும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள் எனவும், காங்கிரஸ் தேசிய கட்சி என்பதால் இந்தியா முழுக்க வேட்பாளர்களை ஒவ்வொருவராக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி தேர்ந்தெடுத்து வருகின்றனர் என்றும்,

மக்களுக்கு நல்லது செய்யும் தலைவர்களை காங்கிரஸ் தலைவர்கள் தேடி தேடி தேர்ந்தெடுத்து வருகின்றனர். இன்று மாலைக்குள் மீதமுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என தெரிவித்தார்.

இன்று மாலை முதல்வர் கலந்துகொள்ளும் நாங்குநேரி பிரச்சார கூட்டத்தில் கன்னியகுமாரி, நெல்லை தொகுதி வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். இதில் கன்னியகுமாரியில் விஜய் வசந்த் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு விட்டது. நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளர் இன்று மாலைக்குள் அறிவிக்கப்பட உள்ளனர் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்