வாரணாசியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் வேட்பாளர் அறிவிப்பு
Ajay Rai:வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸின் அஜர் ராய் போட்டி
மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More – வீடு கட்ட மானியமாக ரூ.1 லட்சம் வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்…
பிரதமர் மோடியை எதிர்த்து அஜய் ராய் போட்டியிடுவது இது மூன்றாவது முறையாகும்.
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவ், 4.80 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். 1,52,548 வாக்குகள் பெற்று அஜய் ராய் மூன்றாம் இடம் பெற்றார்.
Read More – கைதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
முன்னதாக 2014 மக்களவை தேர்தலில், பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிட்ட அரவிந்த் கேஜ்ரிவால் தோல்வியடைந்த நிலையில், அப்போதும் அஜய் ராய் மூன்றாவது இடத்தை தக்கவைத்தார். பாஜகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அஜய் ராய், பின்னர் சமாஜ்வாதி கட்சிக்கு தாவினார். அதன் பிறகு 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை அஜய் ராய் இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.