KKRvsSRH : கொல்கத்தாவை வீழ்த்துமா ஹைதராபாத்? இதுவரை நேருக்கு நேர் மோதிய விவரம்!!
KKRvsSRH 17-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ள நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
நேருக்கு நேர் : இதற்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும் 25 முறை நேருக்கு நேராக ஒரே போட்டியில் மோதி உள்ளது. இந்த 25 போட்டிகளில் 9 முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், 16 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றிபெற்றுள்ளது. நேருக்கு நேர் மோதிய போட்டிகளை வைத்து பார்க்கையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே அதிகமுறை வெற்றிபெற்று இருக்கிறது.
எனவே, கண்டிப்பாக கொல்கத்தாவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பிலே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்றயை போட்டியில் விளையாடவுள்ளது. அதைப்போலவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 26 -வது வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு களமிறங்கு கிறது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
ஹைதராபாத் அணி
அபிஷேக் சர்மா (அல்லது) மயங்க் அகர்வால், டிராவிஸ் ஹெட், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (WK), அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், இம்ரான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி
வெங்கடேஷ் ஐயர், பில் சால்ட் (வாரம்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி
இந்த இரண்டு அணிகளிலும் சிக்ஸர்கள் அடிக்க கூடிய வீரர்களான பாட் கம்மின்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங் போன்ற வீரர்கள் இருப்பதால் போட்டி பார்ப்பதற்கு சுவாரஸ்யமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.